சிக்கிம் டைரி – 2
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை நம் மாநிலத்திற்கு மேல் இருப்பவரெல்லாம் வட இந்தியர்களே. கிழக்கின் சிக்கிமிஸ் கூட வடக்கர்களே நமக்கு. ஒரு வகையில் நமது இருப்பைப் பொறுத்து அது உண்மைதானென்றாலும், பொது வழக்கில் இருப்பது வேறு.உண்மையான வடக்கர்களை இன்று காலை உணவகத்தில் பார்த்தேன். இட்லி, தோசை, உப்புமாவிற்குப் பறக்கிறார்கள். ‘சாம்பர்… சாம்பர்..’ என்று சாம்பாருக்கு உற்சாகமடைகிறார்கள். (உற்சாகம்… (READ MORE)
சிக்கிம் டைரி
மரணத்திற்குப் பின் என்ன என்பதைப் பற்றி அதிகம் கை காட்டாமல் இப்போது இரு இக்கணமே வாழு என்று அறிவுறுத்திப் போன புத்தனின் மார்க்கம் நூற்றாண்டுகளைக் கடந்து வரும் போது பல சங்கதிகளையும் தன்னுள் சேர்த்து கொண்டே வந்துள்ளது. ‘ஊழி வந்து உறுத்த’ என்று இளங்கோவடிகள் சொன்ன ஊழை நம்புகிறார்கள் திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் சிக்கிமிய… (READ MORE)
இமயமலையின் அடிவாரத்து சாங்கு ஏரியில்…
பரந்து விரிந்த உயர்ந்த இமயமலையின் அடியில் ஓர் எறும்பு ஊர்வது எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது இமயமலை ரேஞ்சில் வளைந்து வளைந்து ஊர்ந்து டொயாட்டோ இன்னோவாவில் நாம் பயணிப்பது. 15,000 பனியாறுகளைக் கொண்டிருக்கிறது, எப்போதும் உறைந்திருக்கும் உலகின் உயர்ந்த சிகரத்தைக் கொண்டிருக்கிறது, பூமியினடியில் ஆசிய தட்டுகளுக்குள் ஐரோப்பிய தட்டுகள் உள்நுழைகின்றன, இதனால் இம்மலை ஆண்டுக்கு ஐந்து மீட்டர் உயருகிறது,… (READ MORE)
‘லூசிஃபர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
தேசத்தின் முக்கியப் பொறுப்பிலும், கட்சியின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கும் முக்கியத் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் போது இறந்து போகிறார். மருத்துவமனை வாசலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கொந்தளிக்கும் தொண்டர்கள் கூட்டம். ஆட்சியையும் கட்சியையும் எடுத்துக் கொள்ளப் போவது யார்? பழம் தின்றுக் கொட்டைப் போட்ட பழுத்த அரசியல்வாதிகள் கூட்டமாய் விவாதிக்கும் வேளையில்,… (READ MORE)
சேத்தன் பகத்தின் புதிய நூலவெளியீட்டில்
சேத்தன் பகத்தின் புதிய நூலான ‘இண்டியா பாஸிட்டிவ்’ வெளியீட்டு விழா தேர்ந்தெடுத்து அழைக்கப்பட்ட விருந்தினர்களின் மத்தியில் சென்னை லீலாபேலஸில் இன்று நடந்தேறியது. நேச்சுரல்ஸ் சிகேகுமரவேலின் அழைப்பின் பேரில் கலந்து கொள்ள நேரிட்டது. இது முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே நடக்கும் நிகழ்ச்சி என்பது தொடக்கத்திலேயே தெரிந்து விட்டது. சிகேகுமரவேல் மிக அழகாக பேசினார். இன்றைய அரசியல் நிலையை… (READ MORE)
செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்
இன்றைய ஸ்பெஷல் – *செட்டிநாட்டு கட் மேங்கோ சீஸ் சாண்ட்விச்* ( மாஸ்டர் செஃப் – பரமன் பச்சைமுத்து 😜 ) (வள்ளியம்மை & வள்ளி வீட்டிலிருந்து ‘பரமன், தோட்டத்தில பறிச்ச ஃபரெஷ் மாங்கா, கட் பண்ணி மிளகாய்தூள் போட்டிருக்கேன்’ என்ற குறிப்போடு நேற்று வந்த சங்கதியை வைத்து இன்று புது சாண்ட்விச் பண்ணிட்டோம்ல! நமக்கு… (READ MORE)
தி.மலை வெய்யிலில் திரியும் மனிதர்கள்
நடிகர் விஜய் நடித்த ‘புலி’ படத்தில் சுட்டெரிக்கும் நெருப்புக் குழாய்க்குள் நுழைந்து வெளியே வரும்படியான சோதனை ஒன்றை நடத்தி மனிதர்களையும் சிறப்பு சக்தி பெற்றவர்களையும்(வேதாளம்!) பிரித்துப் பார்ப்பதாக ஒரு காட்சி வரும். வேங்கிக்கால் – தண்டராம்பட்டு – சோமாசிப்பாடி – திருவண்ணாமலை சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அப்படியொரு சக்தி பெற்ற வேதாளங்களைப் போலவே தெரிகிறார்கள். கொளுத்தும்… (READ MORE)
கடவுளின் கதை : நேஷனல் ஜியாக்ரஃபிக்
‘திடீரென எழுந்த ஒரு பெரிய சுனாமி அலையால் எங்கள் கப்பல் தாக்கப்பட்டு நான் தூக்கியெறியப்பட்டேன். கடலின் அடியாழத்திற்குள் விழுந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக நினைவிழந்தேன். வெகுநேரம் கழித்து எங்கிருந்தோ ஓர் ஒளி வருகிறது. ஒளியை நோக்கிப் போகையில்தான் நான் தனியே செயலற்றுக் கிடக்கும் என் உடலைப் பார்க்கிறேன், இறந்து விட்டேனென்று அறிகிறேன். அந்த ஒளி, ‘உனக்கு… (READ MORE)
‘இண்டிகோ விமானம் ஏறி கோவை வந்த திருவண்ணாமலைத் தண்ணீர்’: பரமன் பச்சைமுத்து
மார்வாடி மொழி பேசும் ராஜஸ்தானிய இன பெரும் புள்ளி ஒருவரது இல்லத் திருமணத்தின் விருந்திற்கு விமரிசையாக வேண்டும் என்று திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா ஆட்களை பெருந்தொகை கொடுத்து வரச் செய்தார்களாம். சென்னையில் வந்து இருட்டுக்கடை அல்வா செய்து தர ஆள், அம்பு, சேனை, சாமான், செட்டு என்று நெல்லையிலிருந்து எல்லாமும் கொண்டு வந்த அவர்கள்… (READ MORE)
பூமியில் இருந்தாலும், வானத்தில் பறந்தாலும் விடாது இது என்னை!
குறிப்பு: மலர்ச்சி மாணவர்கள் / என்னிடம் வாழ்வியல் பயிற்சி வகுப்பிற்கு வந்தவர்களுக்கு மட்டுமே இது நன்றாகப் புரியும். 🌸🌸 சென்னையிலிருந்து கோவைக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தேன். இருக்கையில் இருந்த என்னிடம் வந்த கொல்கத்தாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்… ‘மிஸ்டர் பரமன்’ ‘ஸார்… யு ஹேவ் பீன் புக்டு வித் ஸ்பெஷல் சர்வீஸஸ். அண்டு ஹியர் ஈஸ்… (READ MORE)

ஒரேயொரு வாக்கைப் பதிவு செய்ய ஒரு நாள் ஒதுக்கி ஊருக்குப் போய் வருவது
வாக்குப் பதிவு செய்துவிட வேண்டும் என்பதற்காக மணக்குடி வந்தேன். வாக்கு பதிவு மையம் பொதுவான மற்ற இடங்களைப் போல மணக்குடியிலும் பள்ளிக்கூடம்தான். ஆரம்பமே அசத்தலாக இருந்தது. வாக்குச் சாவடியின் வாயிலில் பெரும் வளைவும், வாழைமரங்களும் இருந்தன. பல ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணிகள் மிக அமைதியாக நடந்தேறும் வாக்குச்சாவடியாம் இது. விருது பெற்ற வாக்குச்சாவடி… (READ MORE)
கீத்து காஞ்சிடும்
‘புது இயர்ஃபோன் சரியாயிருக்கான்னு சோதிக்கனும்ப்பா!’ என்று மறுமுனையிலிருந்து பேசும் மகன் பரமனிடம், ‘தென்னங்கீத்து வெட்டி காயப் போட்டேன். இன்னும் பத்து நிமிஷத்துல அதை பின்னனும். இல்லன்னா வடிவம் மாறிடும், பின்ன முடியாது. அப்புறம் கூப்டட்டுமா!?’ என்று சொல்லும் தந்தை பச்சைமுத்து. மணக்குடி வீட்டின் பின்புறம். படமெடுத்து உதவியவர் – பரிக்ஷித். 🌸
சோப்பு நுரை
கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்து பரந்துள்ள, வீராணத்தை விடப் பெரிதான ஏரியொன்றின் மேற்பரப்பில் எவரோ சோப்பு நுரையைப் போட்டு வைத்தது போல் இருக்கிறது விமானத்திலிருந்து வான வெளியைக் காண்பதற்கு. கீழே எல்லாமும் எறும்பைப் போல் தெரியும் இந்த உயரத்தில் இருக்கையில், உயரப் பறக்கும் ராஜாளிப் பறவையின் ஆற்றலின் மீது பெரும் மரியாதை வருகிறது. உயரப் பறக்கும்… (READ MORE)
‘ச்சும்மா இருங்கோ, நூறு ரூவாய் இங்க. கீழ போய் குடிக்கலாம்!’
….. Post from MALARCHI App….. ….. ‘சார் வண்டி பத்து நிமிஷம் நிக்கும் டீ காப்பி டிபன் சாப்டறவங்க சாப்படலாம்’ வகை அறிவிப்புகளும், ‘முருக்கேய், மொளவடேய்! இஞ்சிமரபா!” வகை கூவிக்கூவி நடைபெறும் விற்பனைகளும் இல்லா விமான சேவை என்பதால் மட்டுமல்ல, கொஞ்சம் மண்டை உள்ள பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்பதால் ஜெட் ஏர்வேய்ஸ் அதிக மதிப்பெண்… (READ MORE)
சென்னைப் பனி
விடிந்து எட்டு மணியாகியும் விலகாமல் சூழ்ந்து நிற்கிறது ஐஐடியையும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தையும் இணைத்து நிற்கும் பனி!

ஓரிடத்தில் விதைத்தது ஓராறு இடங்களில் முளைக்கிறது
வளர்ந்து வரும் மகளிடம் வளர்க்கலாம் ஒரு பண்பையென்று வளர்த்தேன் ஓராசை கொஞ்சி மகளையழைத்து கொஞ்சம் மண் கொஞ்சம் விதைகள் ஈந்தேன் சிறு தொட்டியில் மண்ணையிட்டு சிறு மகளின் கைகளினால் சிறு விதைகளை ஊன்றினேன் வெண்டை வெடித்து முளைத்தது வீடு மகிழ்ந்து திளைத்தது இன்முகம் வந்தது – படம் இன்ஸ்டாக்ராமில் பறந்தது தோழிகளுக்கெல்லாம் ஆசையாம் தோட்டமொன்று மாடியில்… (READ MORE)
மாறி நிற்கிறது தமிழ்நாடு மனம் மகிழ்கிறது நிறைவோடு
சாலையோர இளநீர்க்கடை சனங்கள் நிறை காஃபி ஷாப்புக் கடை வணிக வளாக ஃபுட் கோர்ட் வகைவகை பழச்சாறு அவுட்லெட் வந்தன எங்கும் காகிதக் குழல்கள் (பேப்பர் ஸ்ட்ரா)! மரக்கன்று வளர்க்கும் மாணவனே கூடுதல் மதிப்பெண்கள் இனியுண்டே – மகிழ்வூட்டுகிறார் மாண்புமிகு அமைச்சர் பொறித்த கிழங்கு விற்ற பன்னாட்டு நிறுவனம் அவித்த கிழங்கு விற்கிறது இந்நாட்டு மக்களுக்கின்று… (READ MORE)
யோகப் பயிற்சிகளை உலகிற்குப் போதிக்கும் யாவரும் – வாழ்க!
தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கேயுரிய உள்ளத்து நல்லுணர்ச்சி, அடுத்தவருக்கு விளக்கவே முடியாத ஓர் அலாதியானது.தசைகளை உறுதியாக்கும் எடை தூக்கும் பயிற்சி, இதயத்தை நுரையீரலை சீர் செய்யும் ஓட்டப் பயிற்சி, நடைப்பயிற்சி, கருவிகள் எதுவுமின்றி தரையில் செய்யக்கூடிய சிறு சிறு தடகளப் பயிற்சிகள் என சில வகைப் பயிற்சிகளை எனக்கானத் தொகுதிகளாகப் பிரித்து மாற்றி மாற்றி பயிற்சி செய்பவன்… (READ MORE)
எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது.
எதற்காகச் செய்கிறோம் என்று தெரிந்து செய்யும் போது எழும் உணர்வு எல்லாக் களைப்புகளையும் அடித்து அகற்றி விடுகிறது. பின்னிரவு வரை புதுச்சேரியில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்திவிட்டு, இரவு பயணித்து நள்ளிரவில் வீடுவந்து, அதிகாலையே புறப்பட்டு தாம்பரத்தைத் தாண்டி பூந்தண்டலத்திற்கு பயணித்து கல்லூரி வளாகத்தில் போய் நிற்கும் போது… அறுநூற்றைம்பது ஏழை மாணவர்களின் வாழ்வில் மாற்றம்… (READ MORE)
ஆளுயர தட்சிணா மூர்த்தி
பார்த்து விட்டு சட்டென்று கடக்க முடியா ஓர் அழகு அல்லது அமைதி அல்லது இரண்டும் கொண்ட ஒரு தட்சிணா மூர்த்தியை பார்த்தேன் இன்று, சிதம்பரம் கோவிலில். மற்ற இடங்களில் இருப்பது போலவே கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து ஒரு காலை மடித்து இன்னொரு காலின் மீது போட்டு அமர்ந்திருக்கும் அதே உருவகம்தான். ஆனால், இது பிரமிக்க… (READ MORE)

பொங்கலுக்கு மணக்குடியில் நான்!
பால் நிலவொளியில் பனியிறங்கிக் குளிர்ந்து விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள் எட்டு மணிக்கே இரவு உணவை முடித்து ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர் எலந்தாரிப் பையன்கள் எல்லாம் பிழைக்கப் பட்டினம் போனதால் இரவு இன்றும் இரவாகவே இருக்கிறது எங்களூரில், எந்த தொலைக்காட்சி வந்த போதும்! பொங்கலுக்கு மணக்குடியில் நான்! – பரமன் பச்சைமுத்து மணக்குடி 13.01.2019
இந்தப் பிள்ளைகளின் வாழ்வு மேம்படட்டும் இன்னும் இன்னும்…
முக்கால் மணி நேரம் நடைப்பயிற்சி செய்தும் வியர்க்காத, காலை எட்டே முக்கால் மணிக்கும் ’17 டிகிரிதான் இங்க, போவியா!’ என்று குளிர்ந்து நிற்கும் ஓசூரின் சிப்காட்டையொட்டிய ஒரு பிசினஸ் ஹோட்டலில் காலை உணவை உண்ணப் போனவன், அதன் மெனுவைப் பார்த்து அசந்து நின்றேன். ஆங்கிலத்தில் ‘அக்காரவடிசல்’ என்றெழுதியிருந்ததைப் பார்த்து பொங்கி வந்த ‘ஆண்டாள்’ நினைவுகளையும் தாண்டி… (READ MORE)

மாலையில் வெள்ளை காலையில் சிவப்பு
மாலையில் வெள்ளை வெளேரென்றும் அடுத்த நாள் காலையில் ரத்தச் சிவப்பிலும் மாறும் இந்த மலரைத் தெரியுமா உங்களுக்கு? நான் சிறுவனாக இருந்த போது எங்கிருந்தோ இந்தக் கொடியைக் கொண்டு வந்து நட்டார் அப்பா. மணக்குடிக்கே இந்தக் கொடியை அறிமுகப்படுத்தியவர் அப்பாதான் என்று உறுதியாகச் சொல்ல முடியும் என்னால். கொடுக்காப்புலியும், இந்தக் கொடியும் நான் பீற்றிக் கொள்ளும்… (READ MORE)
அரவிந்தர் வாழ்ந்த வீடு
ந ம் வாழ்வில் நடந்தேறும் சில சங்கதிகளை எப்படி நடந்தன என்று விளக்க முடிவதில்லை, ‘எப்படி நடந்தது!’ என்று வியக்க மட்டுமே முடிகிறது. புதுச்சேரியின் ஒவ்வொரு வீதியும் முக்கிய கட்டிடங்களும் பல கதைகளை பொதித்து வைத்துக் கொண்டு காலத்தின் சாட்சியாக நிற்கின்றன. ஒரு வித்தியாசமான கலவையைத் தன்னுள் கொண்ட நகரம் புதுச்சேரி. பாரம்பரியப் பழைய கடந்த… (READ MORE)
சாம்பார்
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு எதேச்சையாக புதுச்சேரி சர்குருவில் சாப்பிட வந்த இடத்தில் சந்தித்த நண்பன் கேட்கிறான், ‘பரமன்! இது என்ன கலாட்டா? சாதத்துக்கு மட்டும்தானே சாம்பாரத் தொடுவே நீ! லட்ச ரூவாய்க் கொடுத்தாலும் டிஃபனுக்கு சாம்பாரத் தொடக் கூட மாட்டியே, சட்னி வைச்சே சாப்புடுவ! இப்ப பொங்கலுக்குப் போயி எக்ஸ்ட்ரா கப் சாம்பார் வாங்கி விளாவி… (READ MORE)
ஒதுங்குமிடத்தில் கூட கட்டமைப்பில் அசத்தல்
நட்சத்திர ஓட்டல்களின் சேவையைத் தாண்டி அங்கே இருக்கும் கட்டமைப்பும் காட்சிப் படுத்தலின் அழகுணர்ச்சியும் அவ்விடங்களின் அதீத சுத்தமும் என்னை எப்போதும் கவர்பவை. சந்திப்புகளுக்கு அரை மணி நேரம் முன்பே போய் விடும் வழக்கம் கொண்டவனாகையால் அனைத்தையும் பார்த்து ரசிக்க முடிகிறது. இன்று நண்பரொருவரைச் சந்திக்க தாஜ் கோரமண்டல் சென்ற போதும் அதே அனுபவம். குடியிருக்கலாம் போன்ற… (READ MORE)
என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது…
என் வாழ்வின் சரத்திர நாள் என்று சொல்ல முடியாது, ஆனால் சாதாரண நிகழ்வாகவும் தள்ளிவிட முடியாது. பொறிஞன், தொழில் நுட்பம் தெரிந்தவன் என்றாலும் வெட்கம் பிடுங்கித்தின்னும் நடுத்தர வர்க்கத்துப் பையனாகவே இருந்து அடியிலேயே உழன்று கொண்டிருந்த எனக்கு வாழ்வின் முக்கியக் கதவுகள் திறந்தது பெங்களூருவில்தான். சென்னை ‘ஆஃபீஸ் டைகர்’ (இன்றைய ‘ஆர் ஆர் டொனாலி’) ப்ராஜெக்ட்டில்… (READ MORE)
மார்கழி மாலை
சென்னை நகரில், காற்றோட்டமான அமைப்பு கொண்ட வீடுகளில் பகல் நேரங்களில் மின்விசிறிகள் ஓடவில்லை. வயதானோர் இருக்கும் வீடுகளில் மாலை நான்கரை மணிக்கு சன்னல்கள் அடைக்கப்படுகின்றன, வேகமாய் வீசும் காற்றில் குளிரெடுக்கிறது அவர்களுக்கு என்பதால். அதிகாலையில் மெதுவாய் எழுந்து பின்பு தடதடவென்று புறப்பட்டு எட்டரைக்கு மேல் வீட்டுக்கு வெளியே வரும்படியான வாழ்வு முறையைக் கொண்ட நகரத்து மக்கள்,… (READ MORE)
இறைவா நன்றி!
கார்மெண்ட்ஸ் உற்பத்தியில் இருக்கும் மலர்ச்சி மாணவர் ஒருவரோடு திருவான்மியூர் ஹாட்சிப்சில் காபி அருந்தி விட்டு எதிர்ப்புறம் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் ஒரு ‘மிகப்பெரிய’ கடையின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். ‘பரமன் சார்… எப்படி இருக்கீங்க! இது நாலாவது ப்ராஞ்ச். உங்க க்ளாஸ் அட்டெண்ட் பண்ணதுக்கு அப்புறம்தான் பெரிய டேர்னிங் பாயிண்ட் எனக்கு. அப்புறம்தான் இதெல்லாம் நடந்தது!’ என்று… (READ MORE)
சிட்னி ஷெல்டனின் காட்சிகளை தமிழ்ப்படுத்தி கண் முன்னே நிறுத்தியவர் ரீ.கி. ரங்கராஜன்.
ஆங்கில நாவல் உலகில் அடித்து ஆடியவர் சிட்னி ஷெல்டன். அக்காலங்களில் அதிகம் விற்றது அவரது நாவல்கள்தான் என்று சொல்வோர் உண்டு. ஆங்கிலமறியாமல் இருந்த அந்த இளம்பிராயத்தில் சிட்னி ஷெல்டனின் நாவல்களை என்னுள் போட்டு, அந்தக் கதாபாத்திரங்களோடு என்னை உலவ விட்டவர் ரா.கி. ரங்கராஜன். ‘குமுதம்’ வார இதழில் வரும் ‘ட்ரேஸி விட்னி’க்காக வாரம் முழுக்கக் காத்திருந்து… (READ MORE)
பாரதி விருது – தினமணி அசத்தல்
பாரதியின் பெயரால் ஒரு விருது வேண்டும், பாரதியைப் பற்றி ஆய்வு செய்வோர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அவ்விருதையும், ஒரு லட்சம் ரூபாயும் அளித்து வெகுமதி செய்ய வேண்டும் என்று கவியரசு கண்ணதாசன் கண்ட பாரதி கனவு இத்தனையாண்டுகள் கழித்து இன்று மெய்ப்பட்டிருக்கிறது. ‘மேல் நாடுகளில் ஷெல்லிக்கு ஒரு கூட்டமென்றால், ஷேக்ஸ்பியருக்கு ஒரு கூட்டமென்றால் மக்கள் கூட்டம் வருகிறது…. (READ MORE)
‘நெல்’ ஜெயராமனுக்கு மலர் அஞ்சலி
‘அரிசிதான் உங்களது உடல் பருமன், சர்க்கரை என எல்லா நோய்களுக்குமான காரணம்!’ என்றொரு பிரச்சாரம் ஒரு பக்கமாய் நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் ‘இந்தா கருப்பு கவுனி, இதோ மாப்பிள்ளைச் சம்பா, இதோ குழியடிச்சான், இத சாப்டுட்டு அப்புறம் சொல்லு!’ என்று பாரம்பரிய ரக நெல்களை மீட்டுத்தந்து இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்தவர் ‘நெல்’ ஜெயராமன். 174… (READ MORE)
எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர். ‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்!’… (READ MORE)
சிந்து சமவெளியைப் படித்த அறிஞருக்கு மலர்ச்சி வணக்கம்!
உலகின் தொன்மையான நாகரீகங்களில் ஒன்று என்று ஒத்துக்கொள்ளப்பட்ட சிந்து சமவெளி நாகரீகத்தில், திராவிட முத்திரைகள் உள்ளன என்று படித்துக்காட்டி உலகத்தை ஒத்துக் கொள்ளச் செய்து அதிர்வுகளை ஏற்படுத்திய அறிஞர் ஐராவதம் மகாதேவன். ‘கஜினி முகம்மதுவை பதினேழு முறை ஓட ஓட விரட்டிய சோழனின் கல்லறை எங்கேடா?’ வகையில் கட்செவியஞ்சலில் வரும் புருடா பகிர்வுகளைப் போல அல்லாமல்… (READ MORE)
சுமந்து செல்லும் சங்கதிகளால் கழுதைக்கும் மரியாதை வருகிறது
கோவையில் இறங்கிய விமானம் விட்டு இறங்கி பெட்டியை பெற்றுக் கொள்ளும் வரிசையில் நிற்கிறேன். யாரோ நம்மையே உற்றுக் கவனிப்பது போலொரு பிரஞ்ஞை வந்து அப்பக்கம் பார்க்கிறேன். சிரித்து கை நீட்டுகிறார் ஒருவர். ‘பரமன் சார்… நான் @#*#@*#”, பொள்ளாச்சி நேச்சுரல்ஸ்!’ ‘ஓ மகாலிங்கம் பார்க் கார்னர் ஹெச்டிஎஃப்ஸி பக்கத்துல!’ ‘ஆமாங்க!’ …. கோவையில் தோசார்ட் திறப்பு… (READ MORE)
வேள்பாரி
காக்கா விரிச்சி, குலநாகினி, ஆட்கொல்லி விதை, கொடிகுலத்து வள்ளி, வேளிர் குலத்து மகள், குறிஞ்சி நிலத் தலைவன், காடறியும் ஆசான், கார்த்திகை நட்சத்திரங்கள், தேவவாக்கு விலங்கு, கொற்றவை கூத்து, துடும்பு, நட்பின் கபிலர், நாகரக்கரடு, விரலிமேடு, பகழியம்பு, சுருளம்பு, மூவிலைவேல், செங்கனச்சோழன், குலசேகரப்பாண்டியன், உதியஞ்சேரல், காடர்கள், திரையர்கள், கூவல்குடியினர், தந்தமுத்துக்காரர்கள், தட்டியங்காட்டுப் போர் என ஈராண்டுகளாக… (READ MORE)
நினைவூட்டும் வசதிகள்
தொலைபேசி வழியே மட்டுமே தொடர்பு என்றிருந்த அந்தக்காலங்களில் முக்கிய நபர்களின் எண்களை மனனம் செய்து பதிய வைத்திருந்த தலைமுறையின் கடைசி எச்சங்களில் நானுமொருவன். அதே வழக்கத்தில் செல்லிடப்பேசி எண்ணையும் உள்ளே பதிய வைக்கும் பழக்கம் வந்தது. செந்தில்நாதன் என்றால் 9841025530 என்று பதினெட்டாண்டுகளுக்கு முன்பு பதிய வைத்தது இன்றும் உள்ளே நிற்கிறது. நவீன முறையில் சேமிக்கும்… (READ MORE)
துடும்பு
பறம்பு நிலத்தில் கொற்றவைக் கூத்தின் போது பாரியின் மக்கள் பல்வேறு கருவிகளோடு துடும்பையும் இசைத்து காட்டையதிரச் செய்வார்கள் என்று சு.வெங்கடேசனின் வரிகளின் வழியே கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். இன்று க்ராண்ட்ஸ்கொயர் மாலில் மலர்ச்சி மாணவர் உதய்ஷங்கரின் நிறுவனக்கிளை திறக்கப் போன போது அதை தொட்டனுபவிக்க முடிந்தது. ஊர்ப்புறங்களில் ஊராட்சி அலுவலக அறிவிப்புகளை வெளிப்படுத்தும் முன் அடிக்கப்படும்… (READ MORE)
‘நான் யார்?’
‘நான் யார்?’ ‘எப்படி அறிவது?’ என்ற கேள்விகளை வைத்துக் கொண்டு அலைபவர்களுக்கு… எதற்கு அறிய வேண்டும் இப்போது? நீ நீதான்! பிறிதொரு ஆழம் உனக்கு வேண்டியிருந்தால் வேண்டிய தருணத்தில் அதுவாக வெளிப்படட்டுமே, உன் இருத்தலை அனுபவி இப்போது. – பரமன் பச்சைமுத்து சென்னை 10.11.2018 Www.ParamanIn.com
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இரவு உணவிற்குப்பின் மீதி கால் வயிற்றை நட்சத்திரங்கள் கொண்டு நிரப்பலாமேயென்று வானம் பார்க்க வாசலுக்கு வெளியே வந்தேன். அடுக்ககத்தின் பார்க்கிங் பகுதியில் காரில் முதுகை சாய்த்துகொண்டு நட்சத்திரம் தேடியபோது, விழுந்த விளக்கொளியில் முதலில் தெரிந்தது மரக்கிளையில் அடங்கி ஒடுங்கி அமைதியாய் இருந்த இருட்டைவிட கருப்பான சில காக்கைகள். இரவைப் பகலாக்கும் தொழில்நுட்பங்கள், ஒளியை உமிழும் விளக்குகள்,… (READ MORE)
சர்கார் – திரை விமர்சனம்
விஜய் அழகாக கச்சிதமாக இருக்கிறார், நன்றாக ஆடுகிறார். கேட்டதை அழகாகக் கொடுத்துள்ளார். ‘டெங்கு கொசு ஒழிப்பு – பொதுப்பணித்துறை’ என்பதில் தொடங்கி படம் நெடுக ஏ ஆர் முருகதாஸ் ஏமாற்றி விட்டார். வீ டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சர்கார்’ – சறுக்கல்.

சோளக்கொல்லை…
அண்ணாசாலையை இன்னும் ‘மவுண்ட் ரோடு’ என்றும், சென்னையை இன்னும் ‘மெட்ராஸ்’ என்றும், ரஜினியை ‘சிவாஜி’ என்றும், தனுஷை ‘வெங்கட் பிரபு’ என்றும், சூர்யாவை ‘சரவணன்’ என்றும் இன்னும் யாரேனும் விளிக்கக்கூடும்தானே. அப்படித்தான் ‘சோளக்கொல்லை’ என்பது எங்களுக்கு. முத்து முதலியாரின் கொல்லை அது என்பதெல்லாம் பிற்பாடு வெகு ஆண்டுகளுக்குப் பிறகே தெரிய வந்தது. அரைக் கால்சட்டை அணிந்து… (READ MORE)
ஊரே அடங்கிவிட்டது
மொத்த மணக்குடியும் உறங்கிவிட்டது. இரவுப் பூச்சிகளும் தவளைகளும் இடைவிடாது சாதகம் செய்கின்றன. புகையாய் இறங்கும் பனியின் கனம் மலர் விட்டிருக்கும் என் மருதாணிச் செடியை தலை கவிழ வைத்திருக்கிறது. இரவு கவிழ்ந்த வீதியைப் பார்த்துக்கொண்டு நான் மட்டும் விழித்தபடி. 09.40pm பரமன் பச்சைமுத்து மணக்குடி
வளர்ச்சிதானே!
‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று நாம் பரிந்துரைத்ததைப் படித்த மகள்கள், ‘இதை நீ படிக்க வேண்டும்!’ என்று பரிந்துரைக்கிறார்கள். வளர்ச்சி இருபுறமும்! – பரமன் பச்சைமுத்து, சென்னை 19.10.2018 Www.ParamanIn.com
பரமன் பச்சைமுத்துவின் வரிகளை பதிவு செய்த’நாம் தமிழர்’ சீமான் அவர்கள்
பரமன் பச்சைமுத்துவின் மலர்ச்சி வாழ்வியல் விதிகளை, ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமான் பயன்படுத்தினால்…!: கட்செவியஞ்சலில் வந்தது ஒரு காணொளி மலர்ச்சி மாணவர் ஸ்ரீநிவாசகா முத்துவிடமிருந்து. சீமானின் குரல் பதிவில் வருபவற்றை கண்டு கேட்டு அதிர்ந்து போகிறேன். அட… எல்லாமே என் வரிகள்! மலர்ச்சி மாணவர்களுக்காக நான் எழுதியவற்றில் தேர்ழ்தெடுக்கப்பட்டவை சில. என் வளர்ச்சி விதைகள்’… (READ MORE)

’96’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
ஆழ் கடல் உயிரிகள், பனிமலைகள், பறவைகள் என அதிகம் பேச்சற்று இயற்கையில் கரைந்து வேறு கண் கொண்டு பார்க்கும், மற்றவர்களால் சிறுபிள்ளைத் தனம் கொண்டவனாகப் பார்க்கப்படும் ஒரு காட்டுயிர் ஒளிப்படக் கலைஞன், இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்து தனது வகுப்புத் தோழர்களை சந்திக்கும் போது தனது அகத்தைத் திறந்து கொஞ்சம் வெளிப்படுத்தி, அதன் ஆழத்தால்… சிரிக்க, நெகிழ,… (READ MORE)
Malarchi Arumbugal
Being with children and teaching them is an experience! #Malarchi #Arumbugal
Arumbugal – Malarchi Course for children
‘Arumbugal’ – MALARCHI course for children – Batch 2 @Chennai Children takes messages deeply, transform greatly! #Malarchi #Arumbugal
Valarchi Tamil monthly பணப் பழக்கம்
#ValarchiTamilmonthly October 2018 வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்
‘இடக்கை’ – எஸ் ராமகிருஷ்ணன்
மன்னர்களின் நினைவுகள் மட்டுமே திரும்பத் திரும்ப காலங்களைக் கடந்தும் கடத்தப்பட்டாலும், வரலாறு என்பது சாமான்யகளாலும் ஆனதுதானே. பாரத கண்டத்தின் பெரும் பாதுஷா இறக்கும் தருணங்களிலிருந்து ஆஜம்கான், பகதூர்ஷா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஹேஸ்டிங், பென்டிங் வரும் வரையில் சாமானயர்களின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வுகளை புனைவு செய்து கண் முன்னே விரிக்கிறது இந்நாவல்.ராணிகள், ஆசை நாயகிகள், சேவகர்கள், பணியாளர்கள்… (READ MORE)
புற்றுத் தேன் உண்டிருக்கிறீர்களா?
‘தேசனே தேனாரமுதே சிவபுரனே!’ பக்தியில் திளைத்து இதை மாணிக்கவாசகர் பாடும்போது, புற்றுத் தேனின் சுவையின் நினைவில் பாடியிருப்பார் என்றே தோன்றுகிறது இன்று எனக்கு. ‘உன் பேரைச் சொன்னாலே உள் நாக்கில் தித்திக்குமே’ என்ற கார்த்திக் ராஜாவின் இசையில் வந்த ‘டும் டும் டும்’ படப் பாடல் வரியைப் போல, புற்றுத் தேன் என்று எழுதும் போதே… (READ MORE)
நம்மால் இல்லை, நம் வழியே
எழுத்து என்பது எழுதுபவனின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு வெளி வருவது. ஒரு அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று இருக்கும் போது, அதுவாக உருவெடுத்துக் கொண்டு எழுதுபவனின் உள்ளக்கிடக்கையில் காலங்காலமாகப் படிந்து கிடங்கும் படிமங்களை ஒட்டிக் கொண்டு வெளிவருகிறது. பல நேரம் அதுவாக வரும், சில நேரங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் அது வருவதில்லை. நாளை காலைக்குள் இத்தனைப்… (READ MORE)
செம்பியன் மாதேவியின் மண்ணை…
திருவையாறு அருகேயிருந்த செம்பியன்குடி குறுநில மன்னன் மழவராயனின் மகள் செம்பியன் மாதேவி, சிவன் மீதுள்ள பக்தியால் சிவாலயங்களுக்குச் செலவது வழக்கமாம். அப்படி ஒரு நாள் செல்லும் போது தஞ்சை மன்னன் கந்தராதித்யர் பார்த்து காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டாராம். அவர்களுக்குப் பிறந்தவன் மதுராந்தகன் (உத்தம சோழன்) என்பதும், கந்தராதித்யர் இளம் வயதிலேயே இறந்து போக… (READ MORE)
இலங்கை மங்கலக் குத்து விளக்கு தெரியுமா!?
முதல் முறை இலங்கை தமிழர்கள் பயன்படுத்தும் மங்கலக் குத்து விளக்கைக் கவனித்தேன். கொழும்புவின் பம்பலப்பிட்டி பகுதியின் சரஸ்வதி ஹால் மக்களால் நிரம்பியிருந்தது. நம் இலங்கை நண்பர்களின் ஏற்பாட்டில் நடக்க இருந்த ‘உறவுகளில் உன்னதம்’ மலர்ச்சி உரை தொடங்க இருந்த நேரத்தில், அறிவிப்பாளர் ‘ஐங்கரனைத் தொழுது மங்கல குத்து விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி’ என்று சொல்லி முக்கிய… (READ MORE)
நிறைவுற்றது – ‘அச்சம் தவிர்…ஆளுமை கொள்!’ தொடர்
திரும்பிப் பார்ப்பதற்குள் ஒன்பது மாதங்கள் (முப்பத்தியைந்து வாரங்கள்) பறந்தோடி விட்டன. வாராவாரம் படித்ததை செயல்படுத்தி, ஓடிவந்து மின்னஞ்சல் மூலமும், ஈரோடு – திருச்சி – திருவண்ணாமலை – வேலூர் பகுதிகளில் நிகழ்ச்சிக்குச் சென்ற சில இடங்களில் அடையாளம் கண்டு அருகில் வந்து செய்த பகிர்வுகளின் மூலமும், வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட வாசகர்களுக்கு நன்றி. ‘சார்… நான்… (READ MORE)
அந்தரத்தில் தூக்கியெறிந்து சுழற்றி
சிறுவர்களை பின்பக்கமாகத் தூக்கி அந்தரத்தில் சுழற்றியெறிந்து முன்பக்கம் பிடிப்பது ஒரு த்ரில் அனுபவம். தூக்கி காற்றில் விடும் போது, சிறுவன் கையை விட வேண்டும், இல்லையென்றால் களேபரமாகிவிடும். வரும் மே மாதம் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் குரு என்கிற மோகனேஸ்வரன் ( பேட்ச் 8) குழந்தையாக இருந்த போது பயந்து கையை இறுக்கி விட, தலைகுப்புற… (READ MORE)
பல்லாயிரக்கணக்கானோரின் பயணங்கள் தொடரும்…
சென்னையிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து சென்னைக்கும் அதிகம் பைக்கில் பயணித்தவர்கள் என்று கணக்கெடுத்தால் என் பெயர் முதல் பட்டியலில் வரக்கூடும். டிசம்பர் மாத நள்ளிரவில் பதினாறு டிகிரி வந்த 2001ன் பெங்களூரிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி மலை கடந்து சாலையோரம் உடல் நடுங்க விறைத்து தேநீர் குடித்துத் தொடர்ந்திருக்கிறேன் நண்பன் செந்திலோடு. லாரிகள் வரிசையாக நிற்கும் சாலையோர தேநீர்க்… (READ MORE)
நம்பிக்கை வை… நம்பி கை வை – பரமன் பச்சைமுத்து, தினமலர்
தினமலரில் வரும் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடரின் 31வது அத்தியாயம். ‘நம்பிக்கை வை… நம்பி கை வை ‘ Facebook.com/ParamanPage
நல்ல தீர்ப்பு – யானைகளுக்கான இடத்தில் யானைகள் வாழட்டும் : – பரமன் பச்சைமுத்து
இந்தப் பூமிப் பந்து என்பது புல், புழு, பூச்சி, மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்க்குமானது. மனிதனுக்கு மட்டுமேயானதல்ல. மொத்த பூமியும் எனக்குத்தான் என்று மனநிலையில் ஆக்கிரமிக்கும் மனிதனால்தான் பல்லுயிர்ப் பெருக்கம் தடைபடுகிறது. இயற்கையின் சுழற்சியில் எதுவுமே வீண் இல்லை. ஒவ்வொன்றுமே ஒரு சங்கிலிப் பிணைப்பால் இணைக்கப் பட்டு மொத்த சூழலும் காக்கப்… (READ MORE)
சிவப்பு நிலா
‘குறுக்கே வந்து நின்று எனக்கு வரும் வெளிச்சத்தை மறைத்தாய் இல்லை? போ!’ என்று பூமியின் மீது சினம் கொண்டு சிவந்தது நிலா. #BloodMoon #சந்திரகிரகணம் #சிவப்புநிலா Facebook.com/ParamanPage
‘சஞ்சு’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என்று பெயர் பெற்ற சஞ்சய் தத்தின் கதையை வைத்து ராஜ்குமார் ஹிராணி செய்திருக்கும் திரைப்படம் – சஞ்சு. துவக்க காலத்தில் போதையில் சிக்கிய சஞ்சய் தத், வெகு நாட்களுக்குப் பிறகு ஏகே – 56 வைத்திருந்த பயங்கரவாத தடுப்பு வழக்கில் சிக்கி சிறை சென்ற சஞ்சய் தத் என்ற இரண்டு பகுதிகளை… (READ MORE)
போர்ட்டோ நோவா தெரியுமா உங்களுக்கு?
ஓர் இடத்தின் அல்லது ஒரு மனிதனின் பெயருக்குப் பின்னே காரணங்கள் இருக்கலாம், விளக்கங்கள் இருக்கலாம், யாருடைய சிந்தனையோ இருக்கலாம். ‘இடுகுறிப் பெயர்’ ‘காரணப்பெயர்’ என்றெல்லாம் பாடங்கள் வைத்துக் கற்பித்த நம் மொழி சொல்லுவதும் இதைத்தானே. ஒரு மொழியில் வழங்கப்படும் பெயரை வேற்று மொழியிலிருந்து வருபவனொருபவன் சரியாக உள்வாங்கிக் கொள்ளாத போது, பெயர் நாறடிக்கப் படுகிறது. அதன்… (READ MORE)
தி ஜானகிராமனின் ‘கமலம்’ – காலச்சுவடு
ஒரு சிற்றூரின் வயல்களைத் தாண்டிய வாய்க்காலின் மதகில் தன் மாமாவோடு கால்களைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்து மீன்கொத்தியை பார்க்கும் எம்ஏ படித்த காசு சேர்க்கத் தெரியாத ஒருவன், தன் அனுபவமாக அவ்வூரில் நடந்த நிகழ்வுகளைச் சொல்வதாகத் தொடங்கும் கதை மெள்ள மெள்ள படமாகக் காட்சியாக விரிந்து உச்சத்தில் ‘பொளேர்’ என்ற ஓர் அறையுடன் முடிந்து நிற்கிறது…. (READ MORE)
கடல்மல்லை
சிறை பிடிக்கப்பட்டு நாடுகடத்தப் பட்ட பார்த்திபனைத் தேடி இளைய குந்தவை தேரில் ஓடிய பாதையில்… சிற்பி மகள் சிவகாமியோடு சிறு வயது சிநேகம் கொள்ள சிறுவன் நரசிம்ம வர்மன் தன் தந்தையோடு குதிரையில் பயணித்த பாதையில்… தமிழிலும் ப்ராக்ருத மொழியிரும் பெரும் புலமை கொண்ட கலைக் காதலன் காஞ்சித் தலைவன் மகேந்திர பல்லவன் பயணித்த பாதையில்…… (READ MORE)
முடிவற்ற சாலை… எஸ். ராமகிருஷ்ணன்
ரயில் பயணங்கள் பற்றி, பாம்பைப் போல வளைந்து நெளிந்து ஓடும் ரயிலின் வயிற்றுப் பெட்டிக்குள் உண்டு. உறங்கி வசித்துப் பயணிக்கும் அனுபவம் பற்றி ‘வளர்ச்சி’ இதழில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் கொண்டு வந்து மனதில் நிழலாட வைத்தது, எஸ். ராமகிருஸ்ணனின் தொடர் ஒன்றை இன்று படித்த போது. ஒரிசாவிலடித்த புயலொன்றின் போது மின்சாரமற்ற இருட்டொழுகும் மழையில்… (READ MORE)
அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ முதல் பாகம் முற்றிற்று.
குகவேலனின் திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பு தொடங்கியது தினமலரில் எனது ‘அச்சம் தவிர்… ஆளுமை கொள்!’ தொடர். அச்சில் வந்த முதல் தொடரின் பதிப்பைப் பார்க்க, நாகை தஞ்சைப் பதிப்பு தினமலர் தேடி மணக்குடியிலிருந்து பயணித்து சிதம்பரம் வழியே கொள்ளிடம் ஆற்றைக் கடந்து தைக்காலில் ஒரு தேநீர்க்கடையில் போய் வாங்கினோம். தேநீர்க்கடையிலேயே தினமலரை நான் பிடித்துக்… (READ MORE)
வேம்புகள் அணிவகுக்கும் சாலை
நெடுஞ்சாலையின் இருமங்கிலும் புளியமரங்களைப் பார்த்திருக்கிறேன். தூங்குமூஞ்சி அல்லது ஐரோப்பிய ‘ஃபாரஸ்ட் பயர்’ மரங்களைப் பார்த்திருக்கிறேன். வரிசையாய் தொடர்ச்சியாய் ஆயிரம் வேப்பமரங்களைப் பார்த்ததில்லை. அதுவும் வெறும் வேப்ப மரங்கள் மட்டுமே. பல்லடம் வழியே பொள்ளாச்சி செல்லும் வழியில் கௌசிகா நதியையும், நொய்யலையும் கடந்ததும், நெகமத்திற்கு சற்று முன்னே வருகிறது இந்த வேம்பு அணிவகுக்கும் இடம். எவர் இதைச்… (READ MORE)
நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே வளர்ந்து நிற்பதைக் காணுமனுபவம் அலாதியானது
நாம் வைத்த கன்றொன்று நம் கண் முன்னேயே நெடுநெடுவென்று வளர்ந்து நிற்பதை பார்க்குமனுபவம் அலாதியானது. ஒரு பச்சிளம் குழந்தையைப் போல நம் கைகளில் தவழ்ந்த கன்று இன்று வேரூன்றி வளர்ந்து தலை(தழை)யசைப்பதைக் காண்கையில், தோளுக்கு மேலே வளர்ந்து நிற்கும் பிள்ளையைப் பார்க்கும் தகப்பனைப் போன்றொரு கிளர்ச்சி வருகிறது. நகரையே நாசம் செய்த வர்தாப் புயலின் மீது… (READ MORE)
நாடுகளிலுள்ளோரின் நாக்குகளின் வழியே நடக்கட்டும் தமிழ்…
ஒரு மொழி, எத்தனை வளமுள்ள மொழியானாலும் அது வழக்கிலிருந்து ஒழிந்து போனால் சாவை நோக்கிச் சரிந்து விடும். செம்மொழியானாலும் எம்மொழியானாலும் பேசா மொழியானால் அவை வாழா மொழியாகி வீழும். இலக்கியங்களும், காப்பியங்களும், நூல்களும், கல்வெட்டுக்களும் மொழியின் செழுமையை மொழியின் பழமையை காலம் தாண்டிக் காட்ட உதவும். மொழியினுள்ளே மாந்தரை ஈர்க்க உதவும், நனைந்து திளைத்து மகிழச்… (READ MORE)
பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடிய ஆட்டம்
😳😳😳 பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரமன் பச்சைமுத்து பெங்களூருவில் ஒரு விளையாட்டுப் பையன். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் மேடையில் இருப்பான். அதிகம் ‘பப்ளிக் ஸ்பீக்கிங்’ போட்டிகள்தான் என்றாலும், ஆட்டம் பாட்டம் என எதையும் தவறவிட்டதில்லை. அல்மாமாட்டர் நாட்களில், ஏதோ ஒரு பேட்ச் பட்டமளிப்பு விழாவில் பெங்களூரில் ஆடிய காணொளித் துண்டின் இணைப்பு கிடைத்தது இப்போது. சிறிது… (READ MORE)
இந்து தமிழ் திசை பெயர் மாற்றம்
பன்னெடுங்காலமாக மக்கள் வாழ்வில் கலந்து விட்ட ஆங்கில நாளிதழ், புதிதாக வந்த அதன் தமிழ் தினசரி… இரண்டும் ஒரே பெயரில் என்ற போது துவக்கத்தில் பெயர் குழப்பம் வரவே செய்தது. குழப்பம் தவிர்க்க மக்களாகவே ‘இந்து தமிழ்’ என்று சொல்லத் தொடங்கினர். இரண்டு குழுமங்களாகப் பிரிக்கும் போது, இதை கருத்திலெடுத்த நிர்வாகத்தைப் பாராட்டுகிறோம். நடுப்பக்கம் எப்படியிருக்க… (READ MORE)
வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்…
🌸🌸 வாழ்வை மாற்றும் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் நான்காம் ஆண்டில் நல்லது பல புரியும் பாதையில்… #ValarchiTamilMonthly Facebook.com/MalarchiPage

பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்
குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை. ‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட… (READ MORE)
ஷாவோலின் – திரைப்படம்
மதம் பிடித்த யானை புகுந்த ஒரு வாழைத்தோட்டம் போல ஒரு பெரும்போரில் மிதிபட்டு நசுங்கி கிடக்கும் ஊரின் இடிபாடுகளிலிருந்து சடலங்களை கண்டெடுத்து அப்புறப்படுத்தி புத்தரின் பெயரால் சேவை செய்கிறார்கள் அவ்வூருக்கு வெளியே இருக்கும் ‘ஷாவோலின்’ கோயிலின் சீடர்கள். குவிந்து கிடக்கும் சடலங்களுக்கிடையே கொஞ்சம் முக்கலும் முணகலும் கேட்க, ‘ஹேய், இங்க ஒருத்தன் உயிரோட இருக்கான்!’ என்று… (READ MORE)
இணைப்பில் இல்லாதபோதே பார்த்ததும் சார்ஜ்…
‘இன்னைக்கு என்னவோ நடந்திருச்சி. வளர்ச்சிப்பாதையில ரெண்டு எடத்துல உள்ளுக்குள்ள அப்படியே ஒரு உதறல் வந்துடிச்சி! இதுவரைக்கும் நடந்த எல்லாத்தையும் விட இந்த வளர்ச்சிப்பாதை வேற ஆழம்!’ – திருவண்ணாமலையில் வளர்ச்சிப்பாதை முடிந்தவுடன் பாபு பகிர்ந்தது. ‘இன்னும் க்ளாஸ் வைக்கலியே. ஏம்மா எப்பம்பா க்ளாஸுன்னு எல்லாருகிட்டயும் ஃபோன் பண்ணி கேட்டுகிட்டே இருந்தேன். பரமன், வாரம் ஒரு வீடியோ… (READ MORE)
சாலைப்பயணத்தோடு நிலா
திருவண்ணாமலையில் வகுப்பெடுத்துவிட்டு வளைந்து வளைந்து செல்லும் பாதையில் பயணிக்கிறேன். வேலூருக்கு என் கூடவே வருகிறது நிலாவும். – பரமன் பச்சைமுத்து 21.06.2018 பாகாயம் Facebook.com/ParamanPage
வெள்ளியை விதைத்தாயிற்று
குழந்தைகள் மிக எளிமையானவர்கள், விதைப்பதை பட்டென்று உறிஞ்சி உள்ளே பதித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள். நாம் வெகு இயல்பாய் செய்யும் எதை எப்போது பிடித்துக் கொள்வார்கள் என்பது தெரியாது. ஒரு மலர்ச்சி மாணவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் இரு வாரங்களுக்கு முன்பு. உரையாடி மகிழ்ந்து விடைபெற்று வெளியே வந்து காரேறும் போது அவ்வீட்டின் சிறுமியிடம் வானத்தைக்… (READ MORE)
அட…தாரை கருவி
ஊதல், தூம்பு, உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு, எக்காளம், குழல், கொம்பு, சங்கு, நமரி, நாதசுவரம், திருச்சின்னம், தாரை என பாரம்பரிய ஊது(காற்று) இசைக் கருவிகள் பற்றி பெயரளவில் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு இன்று, ஈரோட்டில் நம் மாணவர்கள் லதா – ராமலிங்கம் – ராஜேஷ் இல்லத்திருமணத்தில் தாரை இசைக்கருவியை அருகிலிருந்து அனுபவிக்க முடிந்தது.”தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் பாக்கலியோ?’… (READ MORE)
ஈரோடு தினமலரில் நம் எழுத்து
நாம் போகும் ஊரில் நம்மை நம் எழுத்து வரவேற்றால்… மகிழத்தானே செய்வோம்! பிரித்தானியர்களை எதிர்த்து போரிட்ட திப்பு, தீரன் சின்ன மலை ஆகியோர் வசமிருந்த மண் கோட்டை இருந்த பகுதியில், நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டு எண்ணூற்றியைம்பது ஆண்டுகளாக வழிபடப்படும் ஆருத்ர கபாலீஸ்வரர் ஆலயம் அருகில், நமது எழுத்தைத் தாங்கி நிற்கும் ஞாயிறு தினமலரை ஏந்தி மகிழ்கிறேன்… (READ MORE)
காவிரி வருகிறது
கேரள வயநாடுப் பகுதியில் பெருமழையைத் தந்ததன் மூலம் கர்நாடக கபினியை நிரம்பச் செய்து தமிழகத்துக்கு நீரைத் திறக்கச் செய்து, எல்லாருக்கும் மேலே நானிருக்கிறேனாக்கும் என்று கூறி இந்திய அரசியல்வாதிகளைப் பார்த்து வாய் விட்டுச் சிரிக்கிறது பெரும் இயற்கை! பெரும் சக்தியைப் போற்றுதும்! – பரமன் பச்சைமுத்து சென்னை 15.06.2018 Facebook.com/ParamanPage
‘கலகக் கலைஞன்’ – ஜெயகாந்தன் – கவிஞர் வைரமுத்து கட்டுரை
தமிழாற்றுப்படை வரிசையில் ஜெயகாந்தனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை கவிஞர் வைரமுத்து வாசிக்கும் நிகழ்ச்சிக்கு உடல்நலம் குன்றிய எழுத்தாளர் சிவசங்கரி இருமல்களுக்கிடையே தலைமையுரை ஆற்றும் போதே புரிந்தது, ‘பரமன், இந்த ஆளுமை செய்யும் இந்தப் பகிர்வுகள் தவறவிடக்கூடாதவை. நல்லவேளை நீ வாய்க்கப் பெற்றாய்!’ என்று பல்லி கத்தியது மண்டைக்குள்ளே. ‘வடகிழக்கு – வடக்கு இந்தியாவின் இலக்கியத்தோடு என்னை… (READ MORE)
இலங்கையின் வீரகேசரி வெயிட்டிருக்கும் எனது திரைவிமரிசனம்
👏👏👏👏 👍👍👍 இலங்கை நாட்டின் மிகப்பெரிய தேசிய நாளிதழான ‘வீரகேசரி’ வெளியிட்டிருக்கும் எனது திரை விமரிசனம். எனது பெயரைப் போட்டாலும் போடா விட்டாலும் தெரிந்தேயிருக்காது எனக்கு. வேறு தேசத்தில் வசிக்கும் எனக்கு ‘வீரகேசரி’ பத்திரிக்கை பார்வைக்கே வராது. எனது எழுத்துக்களை எடுத்து அப்படியே வேறு பெயரில் வெளியிட்ட, பெயரில்லாமல் வெளியிட்டவர்களைக் கண்ட வலியான தொடக்க கால… (READ MORE)
அம்மாவான மனைவி
‘கணவன் சரியில்லை! அவர் அம்மா பேச்சையே கேட்கிறார்!’ என்று பிரச்சினை செய்த மனைவி, குழந்தைகளை கணவனிடமிருந்து பிரித்துக் கூட்டிப் போனாள்… ‘என் பேச்சைக் கேட்கற மாதிரி ஒழுங்கா வளக்கனும் இதுங்கள!’ என்று கூறி. – பரமன் பச்சைமுத்து 24.05.2018 Www.ParamanIn.com