
‘காக்கா முட்டை’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து
இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு! சிரிக்க வைக்கிறது, நெகிழ வைக்கிறது, கைதட்ட வைக்கிறது, படத்தின் அந்த சிறார்களுக்காக வருந்த வைக்கிறது, இப்படி எல்லாம் செய்கிறது படம். … ப்ரகாஷ் ராஜ் பணியில் சொல்வதானால், ‘ஏய்… யார்ரா நீ?’ என்று பிடித்துக் கேட்கவேண்டும் படத்தின் இயக்குநரை. ‘ஊசிப் போனாதாண்டா நூல் நூலா வரும்!’ ‘சிம்பு… (READ MORE)

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே
இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)
அதிக ஆசைகள் கொண்டவன் நான்…
அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால், ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய, யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)
Casualness = Casualties.
Casualness in few things lead to Casualties. People who take everything casual will suffer at the end. There are few aspects that matter your life. Be serious in those things, give yourself completely and life will reward you very high…. (READ MORE)
Organized life, tough?
Leave about those 100 things you have less control and mostly depend on world. Mark your timestamp on few activities. It could be your daily lunch time, salary date for your employees, your spiritual time or post dinner reading time… (READ MORE)

உள்ளே ஒரு மாணவன்…
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ‘மாடர்ன் டீச்சர் – நியூ ஐடியாஸ் ஆன் எஜுகேஷன்’ போட்டியில், தேசிய அளவில் 700க்கும் மேற்பட்ட கல்லூரி, பள்ளி ஆசிரியர்களிடையே நடந்த பங்கேற்பில், ஆன்ட்ராய்டை வைத்து ஆங்கிலம் கற்பிப்பது எப்படி என்று காண்பித்து முதலிடத்தை வென்றுள்ளார், விழுப்புரம் சத்தியமங்கலம் அரசுப் பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப். நம் மாநிலத்து அரசுப்… (READ MORE)

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 5
பிரபல வாரப் பத்திரிகையில் வரும் எனது ‘ அச்சம் தவிர், ஆளுமை கொள்’ தொடரிலிருந்து ஒரு பகுதி [Part 5 ] …………………………………… கேள்வி: “வணக்கம் பரமன். நான் உண்மையாய் வேலை பார்க்கும் ஊழியன். என் வேலைகளை மிகப் பொறுப்பாக பார்க்கிறேன். ஆனால் என் அலுவலகத்தில் சிலர், தங்களது வேலையில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, மேலிடத்தில்… (READ MORE)

ஆதலினால் அன்பு காட்டுங்கள்…
அன்பு காட்டுங்கள், அன்பு காட்டுங்கள், அடுத்தவர் மீது அன்பு காட்டுங்கள். ஒன்றாயிருந்ததை பிரித்து வைத்து இரண்டாய் செய்யும் ஆசை, இரண்டாயிருந்ததை இணைத்து ஒன்றாய் ஆக்கும் உயிர் சிமென்ட் அன்பு. அருகில் இருப்பவரை தூரமாக்கி விடுவது ஆசை, தூரத்திலிருப்பவரை அன்மையில் உணரவைப்பது அன்பு. அன்பு ஊறும் அகத்தில் அழுக்குகள் அகற்றப்படும். கழுவித்… (READ MORE)

‘Shamitabh’ – Movie Review : Paraman Pachaimuthu
பிறவி ஊமையாய் பிறந்தபோதும், பிறவி எடுத்ததே பெரும் நடிகனாக வேண்டும் என்பதற்காகவே என்றிருக்கும் இளைஞனொறுவனும், என் அடிக் குரலின் வசீகரம் அத்தனைபேரையும் கட்டிப் போடும் என்று இறுமாப்பில் இருக்குமோர் முதியவனும் ஒன்று சேர்ந்தால் என்னவாகும், பெயர், பணம், புகழ், இவற்றோடு போதையும் சேர்ந்தால் என்னவாகும் என்று போகும் (‘மைக் மோகன் – எஸ் என் சுரேந்தர்’… (READ MORE)

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 4
பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் என் தொடர்வின் பகிர்வு: நான்கு: நம் சோழ மாமன்னன் ராஜேந்திர சோழன் பற்றியும், ஜப்பானின் டோக்யோ நகரில் எனக்கேற்பட்ட அனுபவங்கள் பற்றியும், ‘ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!’ ‘தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல’ ‘ஆங்கிலம் அறிந்துகொள்ள வெறும் 30 மணிநேர பயிற்சியே… (READ MORE)
எதைப் பார்க்க வேண்டும்
கண்ணுக்கு முன்னே பரந்து விரிந்த அலையடித்து ஆர்ப்பரிக்கும் அழகுக் கடல், காலுக்கு சில அடி தூரத்தில் சகதி. இப்போதைக்கு இங்கே எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில், எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்த்தால் உங்களுக்கு நன்மை என்று முடிவு செய்து செயல்படுங்கள். வாழ்க! வளர்க! – Paraman Pachaimuthu Facebook.com/MalarchiPage

‘ஐ’ – Movie Review – பரமன் பச்சைமுத்து
வாழ்வின் குறிக்கோளே வடிவழகு, உடற்கட்டு காப்பதுதான் என்று வாழும் ஒருவன், புற அழகை வைத்துப் புகழ் பொருள் சேர்க்கும் ஒரு புதிய உலகத்திற்குள் வரும்போது, கனவிலும் நினையாக் காதலும் கைகூடும் வேளையில், வாழ்வாய் நினைத்த வடிவமே சிதைந்துபோனால்… என்னவாகும்? ‘உடலழகை தாண்டி உள்ளத்தழகு பார்க்கப்படுமா?’ (‘அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை, மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா!’ என்ற… (READ MORE)

போகி என்றொரு பெயரில்…
போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பைகளைப் போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி, பெரியவர்கள் மூச்சுத் திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை, கெடும் அவாவை, இன்னாச் சொல்லை, புறங்கூறும் போக்கத்தப் பொழப்பை,… (READ MORE)

‘Taken 3’ – Movie review
திரைக்கதை சரியாய் இருந்தால் யார் நடித்தாலும் படம் மின்னும், சரியான பாத்திரத்தில் கூடவே, சரியான ஆளும் அமைந்தால்…பட்டையைக் கிளப்பும். அதுதான் நடக்கிறது இப்படத்தில். ‘போர்ன் ஐடென்டிடி, சுப்ரிமசி’ வரிசை படங்களுக்கப்புறம், ‘இப்படி ஒரு ஆக்ஷன் படம் பார்த்து எவ்வளவு நாளாச்சி!’ என்று நினைக்கச் செய்யும் படம். மகளுக்காக எதையும், எதையுமென்றால் எதையும் செய்யும், முந்தைய ‘டேக்கன்’… (READ MORE)

ஆழ்ந்த வரிகள் – திருப்புகழ்
‘அறிவால் அறிந்து உன்னிருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே!’ – திருப்புகழ் வரிகளின் ஆழமான அர்த்தம் ஆடிப்போகச் செய்கிறது!

திருவாதிரை திருநாள் இன்று!
அடைமழை பெய்தபோதும் ஆடற்பெருமான் அவனாகவே சென்று அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத் திருவாதிரை திருநாள் இன்று! ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடி ஆடி வருவதை காணக் கண் ஆயிரம் வேண்டும். அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,… அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும். அமைதி வரட்டும்! : பரமன் பச்சைமுத்து

‘கனவு மெய்ப்படவேண்டும்’ on 1st Jan’15
‘கனவு மெய்ப்படவேண்டும்’ Program On 01.01.15 @ Muththamizh Peravai 10am-12pm

அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3
பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்: ‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம். “பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய… (READ MORE)

‘அச்சம் தவிர், ஆளுமை கொள்!’ – Part 2
பிரபல வாரப் பத்திரிகையில் பிரசுரமாகி வரும் தொடர்: சென்ற இதழில் பெங்களூருவில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தைப் பார்த்தோம். அதில் பார்த்த கார்த்திக், அருண் கதையில் மட்டுமல்ல, இவ்வுலகத்தின் நிதர்சனமான உண்மை – ‘படிப்பு மட்டுமே போதாது!’. ‘படிச்சவன் பாட்டக் கெடுத்தான், எழுதனவன் ஏட்டைக் கெடுத்தான்,’ என்று நீட்டி முழக்கி குத்திப் பேசும் பாரதிராஜா பட… (READ MORE)

‘PK’ – Movie review
வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் கடவுளின் சக்தி வாய்ந்த ரிமோட்டை சிங்காரச் சென்னையில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், என்னாவாகும்? ‘அறை எண் 305ல் கடவுள்’ இருப்பார். வானுலகிலிருந்து மண்ணுலகிற்கு வரும் வேற்றுகிரகவாசி ஒருவனின் சக்தி வாய்ந்த ரிமோட்டை ராஜஸ்தான் பாலைவனத்தில் யாரேனும் அபகரித்துக் கொண்டால், அவன் தலைநகர் தில்லிக்குப் போனால், என்னவாகும்? அவனது தேடலும், அவனது விகல்பமில்லா… (READ MORE)

வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே…
மாக்களாயிருந்தோரை, மக்களாய் மாற்றிடவே மரதச்சன் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் மலர்ந்தவனே… வையம் மேம்பட, வைக்கோலில் வந்துதித்தவனே வணங்குகிறோம்! தன் கருத்துக்களை நிலைநாட்ட எவர் உயிரையும் எடுக்கலாம் என்ற விதிகொண்ட உலகில், தன் உயிரையே கொடுத்து உயர் கருத்துக்களுக்கு உயிர் கொடுத்தவனே… எபிரேயம் இயம்பிய எருசலேமின் ஏசுவே… முப்பது வெள்ளிக்காக உன்னைக் காட்டிக்… (READ MORE)

மின்பிம்பங்களுக்கு உயிர் தந்தவர், மின் எரியூட்டலுக்கு உடல் தந்துவிட்டார்!
நன்னிலம் பகுதியில் பிறந்தவர், நானிலம் போற்ற வாழ்ந்தவர், தமிழ் நிலம் தவிக்கப் போய்விட்டார்! ஏஜீஸ் ஆஃபீஸில் நாடகத்தை தொடங்கியவர், நேற்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார். பல பாத்திரங்களுக்கு வாழ்வளித்து ஏற்றிவிட்டவர், தன் பாத்திரங்களை மட்டும் உலகிற்கு விட்டுவிட்டு உலகை துறந்து விட்டார். காலத்தை மீறிய படங்களைத் தந்தவர், காலதேவனிடம் போய் சேர்ந்துவிட்டார். அடடா,… (READ MORE)

அச்சம் தவிர், ஆளுமை கொள் – 1 : பரமன் பச்சைமுத்து
பிரபல வாரப் பத்திரிகையில் வெளிவரும் தொடர்: “படித்தால் மட்டும் போதுமா?” சமர்ப்பணம்: சிறுகச் சிறுகச் சேர்த்ததையெல்லாம் மொத்தமாய் கொட்டியும், விளைநிலங்களை விற்றும், வியர்வையோடு தங்கள் ரத்தத்தையும் தந்து தங்கள் சக்திக்கு மீறி தங்கள் பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட்டு முன்னுக்கு வந்துவிடுவான் என்று காத்திருக்கும், தமிழகத்தின் தகப்பன்மார்களுக்கும், ‘ஆணிபோயி ஆவணி வந்தா என் புள்ள டாப்புல… (READ MORE)

தினமணி – “கம்ப ராமாயணம் படித்தால் கடவுளை உணரலாம் – பரமன் பச்சைமுத்து”
கம்பன் கழகம், திருப்பத்தூர் First Published : 07 September 2014 04:04 AM IST கம்ப ராமாயணத்தைப் படித்தால் கடவுளை உணரலாம் என திருப்பத்தூர் கம்பன் விழாவில் பரமன் பச்சைமுத்து பேசினார். திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் சார்பில் 36ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில்… (READ MORE)
சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம்…
சூரியப் பிள்ளைக்கு சுகமில்லையாம், ‘ஒரு நாள் ஓய்வெடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது, போ!’ என்று கூறி எட்டு ஆகியும் எழாமல் இருக்கட்டும் என்று இழுத்துப் போர்த்திவிட்டு விட்டாள் இயற்கை அன்னை, இருண்ட வானம் அழுகிறது! தழிழகத்தில் மழை. – பரமன் பச்சைமுத்து

ரஜினி என்னும் மனிதனே…
மனிதனே… அந்த வயதில், ‘‘இந்தப் பீடி முடியறதுக்குள்ள உன் தலைவன முடிக்கிறேன் பாரு!’ என்று சொல்லி தீக்குச்சித் தெறிக்கப் பத்தவைத்து நீ சண்டையிட சென்றபோது, சண்டை போடுவதற்கு முன்பே எங்களை ஜெயித்தாய். … ‘கண்ணா நாம வாங்கனத எப்பவுமே வச்சிக்கமாட்டோம், திருப்பிக் குடுத்திடுவோம், இப்புடுச் சூடு,’ என்று கூறி புரட்டியெடுத்த போது தியேட்டரில்… (READ MORE)

சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!
நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)

அகப் பிளவு நோய்
முகப் பிளவு நோய் கொண்ட பாகிஸ்தான் பிள்ளைக்கு சென்னையில் முகச்சீரமைப்பாம், அகப் பிளவு நோய் கொண்டோர்க்கு அகச் சீரமைப்பு எங்கே?

இன்ட்டர்ஸ்டெல்லார்
b ‘அண்டப் பெருவெடிப்பில் அசாதாரண பயணத்தில் ஐம்பரிமாணத்தில் வரும் கோளாறு,’ என்று எழுத சுஜாதா இல்லையே என்று தோன்றியது, ‘இன்ட்டர்ஸ்டெல்லார்’ பார்த்துவிட்டு வெளியே வரும்போது! – பரமன் பச்சைமுத்து

‘காவியத் தலைவன்’ – Movie review
தன்னுடன் இருப்பவனுக்கு பெயரும் புகழும் வருவது கண்டு பொறுக்காது, சூழ்ச்சிகள் பல செய்து, சூழ்நிலைகளைப் பயன்படுத்தி அவனை வெளியேறச் செய்யும் மேடை நடிகனின் கதை. வெளியே ஊர் உலகத்திற்கு என்னதான் கதை சொல்லி நம்ப வைத்தாலும், உள்ளத்தினுள்ளே ஓர் நாள் உண்மை வந்து உறுத்தும் என்று முடிகிறது. வெள்ளையர்களை வெளியேறச் செய்ய வேண்டுமென்ற விடுதலை… (READ MORE)

சொக்கப் பானை சுடரில்…
வெப்பம் குறைந்து வென்பனி பொழியட்டும், எல்லோர் வாழ்விலும் குளுமை வரட்டும் அந்தி மாலையில் தோன்றும் ஆறு கார்த்திகை நட்சத்திரங்களும் நல்ல சேதிகள் சொல்லி மின்னட்டும். சொக்கப்பானைச் சுடரில் சோம்பலும், சோர்வும் ஒழிந்து போகட்டும். அக இருள் அழிந்து உள்ளே சுடர் வரட்டும் திருக்கார்த்திகை தீப நாளில்! வெளிச்சம் பெருகட்டும், வெற்றி… (READ MORE)

பூஜையறைக் குரங்கு…
வயிற்றுப் பசி தீர்க்க திறந்திருந்த பால்கனி வழியே எங்கள் வீட்டு ஹாலுக்குள் வந்து டாட்டா ஸ்கை பாக்சை தள்ளிப் பார்த்து, ஏதும் கிடைக்காமல் அருகிலிருந்த பூஜையறைக்குள் புகுந்து விக்ரகத்தின் மீதிருந்த சாமந்தியையெடுத்து பிய்த்துப் பிய்த்துப் போட்ட வேளையிலே, அடுத்த அறையிலிருந்து வந்த அத்தை அலறியது பார்த்து பாய்ந்து ஓடிப் போனது. பசிக்கு வழி தேடி பால்கனி… (READ MORE)
இறையருளால்…
ஒன்றுமே நடக்காமல் ஓராண்டு கழியலாம் இரண்டே நாட்களில் எல்லாம் மாறிப்போகும் இறைவன் திருவருளால்! :பரமன் பச்சைமுத்து

Fury – Movie review : Paraman Pachaimuthu
A Super scene – Movie Clip here – CLICK HERE to see VIDEO ‘கொள்கையாவது, குடைமிளகாயாவது, உயிர்தான் முக்கியம். கொல்லப்படாமல் இருக்க, கொல்வது முக்கியம்’ என்று எதிலும் பிடிப்பில்லாமல் மூர்க்கமாய் போர்த்தொழில் புரிந்து வாழும் ஒரு குழுவிற்குள், ‘இதெல்லாம் என் கொள்கைக்கு எதிரானவை, செய்யமாட்டேன். என்னை வேண்டுமானால் கொன்று போடு. கொல்லமாட்டேன்…. (READ MORE)

சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்
வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)
மழைநேர மனசு
‘வீட்டை விட்டுக் கூடப் போகச் சொல்லு, போய்விடுகிறேன். ஆனால் செய்திகளை மட்டும் பார்க்கச் சொல்லாதே!” என்று காததூரம் ஓடும் பெண்மணிகளையும், குழந்தைகளையும்கூட அதிகாலையில் எழுந்து பல்கூடத் துலக்காது சிரத்தையாய் செய்திகள் பார்க்க வைத்து விடுகிறது இந்த மழை. ‘இன்னைக்கு பள்ளி இருக்கா, விடுமுறையா?’ …. சீஃப் மினிஸ்ட்ரே நமக்கும் சி.இ.ஓ.வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது… (READ MORE)

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…
இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)
எருமைமாடும், ஏரோப்ளேனும்…
“எருமைமாடு கூட ஏரோப்ளானில் இடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற மாநிலம் எங்கள் மாநிலம்!” – என்று சொல்வார்களோ! #Aircraft 737 hit a buffalo in its takeoff roll in Surat(Gujarat) and got damaged – News

“Life – Lord Krishna’s way…”
[Got Published in a leading English Magazine] Viewing the same thing, two people can process two different thoughts and have two completely different experiences. From the terrace of a building, Vasudha, my friend, and I were watching schoolchildren, in uniform,… (READ MORE)
நாய் பேசுமா?
என்ன சொன்னாலும், ‘லொள்’என்றே சப்தமெழுப்பும் நாயை ‘லவ் யூ’வென சொல்ல வைக்க முடியுமா? முயன்றிருக்கிறார் ஒருவர். பாருங்களேன். (வாட்ஸ் அப்பில் வந்தது)
பேசிப் பேசி…
பேசிப் பேசி தீர்வு காணலாம். பேசிக்கொண்டு மட்டுமே இருந்தால், பேசிப் பேசி சோர்வு காணலாம். வெறும் பேச்சு மட்டுமே போதாது வேலையில் இறங்குங்கள், வெற்றி வேண்டும் நமக்கு!

‘கத்தி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
அந்தக் காலத்தில் மிகப் பெரிய ஹிட்டடித்த ‘வாணி – ராணி’, எம்ஜியாரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ரஜினியின் ‘ராஜாதிராஜா’ ‘அதிசய பிறவி’ ரக சாதுவான நல்லவர் ஒருவரின் இடத்தில், அவரைப் போலவே உருவம் கொண்ட பொல்லாதவர் வந்து உட்கார்ந்து ஆடும் அதே ஆள்மாராட்ட ஆக்ஷன் கதை, புதுக்களம் என்ற ஆயில் பிரிண்ட் போடப்பட்டிருக்கிறது. உழுதுண்டு வாழ்ந்தவர்கள்… (READ MORE)
இப்படிக்கு, இக்கால மனிதன்…
நேற்று, ஓடி ஓடி உழைத்து, வேளா வேளைக்குப் பசியார உணவுண்டேன், உடல் நலம் கண்டேன். இன்று, ருசியார உணவு கண்டு, கண்ட வேளையில் உண்டேன், உடல் கெட்டேன், ஓடி ஓடி உழைக்கிறேன், நலம் பெற. இப்படிக்கு, இக்கால மனிதன் By – பரமன் பச்சைமுத்து [இன்ஃபினி இதழில் பிரசுரமாயிற்று]

தீரா நதி
காலைவரை கைவீசி நடந்த கமலவள்ளி இப்போது கண்ணாடிப் பேழையில் கண்ணுறங்குகிறாள். காலையில் கடைசி ஊர்வலமாம். கடைசிக்காலம்வரையிருப்பாளென்றிருந்த கணவன், கடன்களையாற்ற கையூன்றி எழத்தான் வேண்டும். வாழ்க்கை ஒரு தீரா நதி. எவர் பொருட்டும் அது நிற்பதில்லை. சிலசமயம் வேகமாய் போகும் நடுப்பகுதிக்கு இழுத்துப் போய் வெகு தூரம் கொண்டு விடுகிறது. சிலகாலம் மெதுவாகப்… (READ MORE)

My decision – right or wrong! – Paraman Pachaimuthu
[ Published in an English Magazine ] ‘Eega eega eega… Eedaa Eedaa Eedaa… kannu rendil theda… hey… Eega Eega Eegaaaa.’ A small boy cut my way and ran to the other side road, singing this song very loudly, with a… (READ MORE)

நான் மங்கல்யான், செய்வாய் கிரக விண்கலம் பேசுகிறேன்…
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,” என்றுப் பாடிப்போன வள்ளலார் வாழ்ந்திருந்த பகுதிகளில் வளர்ந்ததாலோ என்னவோ, வயல், வரப்பு, விவசாயம் என்றால் ஒரு தனி உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் என்னுள்ளே. பச்சைப் பசேலென்று தலை நிமிர்த்தியோ அல்லது நன்றாய் விளைந்து, தங்க நிறத்தில் நெல்மணிகளின் கனத்தில் தலைசாய்த்தோ நிற்கும் நெல்வயல்களினூடே நடந்து போயிருக்கிறீர்களா? புல்மூடிய… (READ MORE)

Yes, People will speak behind you
[ Published in ‘infinithoughts’ July,2014 ] Yes, People will speak behind you – Paraman Pachaimuthu Dear Vini, I understand how one would feel when people around us speak badly about us. Feel like earth should break, open wide and feel… (READ MORE)
தெருச்சந்தி பிள்ளையார் படம்
கடவுள் நம்பிக்கையில் அல்ல, யாரும் குப்பை போட்டு சிறுநீர் கழிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தொங்க விடப்படுகிறது தெருச் சந்தி சுவரில் பிள்ளையார் படம்! : பரமன் பச்சைமுத்து
தஞ்சையில்…
என்னை மலைத்துப் போகச் செய்த, மனங்கவர்ந்த மாமன்னன் ராஜராஜனின் மண்ணில், ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன். வந்தியத்தேவனும், குந்தவை தேவியும், வீரநாச்சியாரும், பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!
தேடலும், தேர்வும்
நல்ல தமிழ் எழுதவேண்டி இன்று ஐய ஓகாரம், குற்றியலுகரம், ‘என்ற’ ‘என்னும்’ வித்தியாசங்கள் படிக்கும்போது, அன்று வாழ்க்கைக்குப் படிக்காமல், தேர்வுக்குப் படித்தது புரிகிறது. தேடலுக்குப் படிப்பதற்கும், தேர்வுக்குப் படிப்பதற்கும் ஆழ அகல உயரங்கள் வேறுவேறு! -பரமன் [‘இன்ஃபினி’ இதழில் பிரசுரமாயிற்று]
மனைவி படிக்கிறாள்
என் மனைவி… குளித்துவிட்டு வருகையில் குரோமோசோம்கள், ஜீன்கள் என்கிறாள். டவலை உலர்த்தயில் டெல்லி சுல்தானேட், ஷேர்ஷா என்கிறாள். கடுகு தாளிக்கையில் கங்கைகொண்ட சோழன், கார்டீசியன் ஸிஸ்டெம்ஸ், ட்ரிக்னாமெட்ரி சொல்கிறாள். சோறு இறக்கும்போது சோடியம் குளோரைடின் சமன்பாடு சொல்லிப் பாக்கிறாள். நடந்து செல்லும்போது நியூட்டனின் இயக்க விதி ஒப்பிக்கிறாள். மர்ச்சனட் ஆஃப் வெனிஸும், ஷேக்ஸ்பியரும் மனனம் செய்கிறாள்…. (READ MORE)
போகி என்றொரு பெயரில்,
போகி என்றொரு பெயரில், போன வருஷத்து குப்பை எதையாவது போட்டுத் தீயிலிட்டுக் கொளுத்தி பெரும்புகைக் கிளப்பி பெரியவர்கள் மூச்சுத்திணற, பாரின் வளி மண்டலத்தில் வலி உண்டாக்கியது போதும்! ‘அகம்’ என்றால் வீடு என்றொரு பொருள் உண்டென்று நமக்கு வசதியானதை எடுத்துக் கொண்டு, புற அழுக்குகளை பழங்குப்பைகளை களைந்து, தீயிட்டு காற்றில் குப்பையைக் கலந்தது போதும். அழுக்காறை,… (READ MORE)
பவர்…
கடைத்தெருவில் மக்களோடு நான் நடந்து வரும் விதத்தை தூரத்திலிருந்து கவனித்த என் மனைவி வீடு வந்ததும் சொன்னாள், “முன்ன மாதிரி இல்ல நீங்க இப்போ, உங்களுக்கு பவர் கூடிடிச்சிங்க!” அட, மனைவியே சொல்லிவிட்டாள், வேறென்ன வேண்டும்! எப்படி இருக்கும் எனக்கு! நிஜமாகவே இன்னும் கொஞ்சம் பவர் கூடியதுபோல இருந்தது. சரி… சாயந்திரம், கண் டாக்டரைப் போய்ப்… (READ MORE)
இலங்கையில் பிறந்து தமிழர்கள் இதயத்தில் வாழும் பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன்… தமிழ் சினிமாவிற்கு நேச்சுரல் லைட்டிங் பார்க்கப் புதிய கண்களைத் தந்தவனே, நீ செல்லுலாய்டில் எழுதிப் போனது, தமிழ் சினிமாவின் ‘அழியாத கோலங்கள்’, கமல், ஶ்ரீதேவி, அர்ச்சனா, ஷோபா, பாலா, வைரமுத்து, சசிகுமார், தனுஷ், வெற்றிமாறன்… என்று தேசியவிருது குவிப்போர் அனைவரும், உன்னோடு கைகோத்தோர் அல்லது… (READ MORE)
ஸெல்ஃப் மேட் மேன்…
“நான் யார் உதவியும் இன்றி நானாகவே உருவானவன், சுயம்பு, ஸெல்ஃப் மேட் மேன்,” என்று கரவொலிக்கிடையில் மேடையில் முழங்கியவன் வீட்டிற்குள் வந்ததும் சொன்னான் , மனைவியிடம் – “ரொம்பத் தல வலிக்குது டீ போடேன்” மகனிடம் -“நின்னு நின்னு கால் வலிக்குது, கொஞ்சம் பிடிச்சி விடேன் ப்ளீஸ்” மகளிடம் -” அப்பா கார்ல பேக்ஐ வச்சிட்டு… (READ MORE)
இதோ இந்த மழைத் துளி,
இதோ இந்த மழைத் துளி, இதற்கு முன்பு ஆறாகவோ, ஏரியாகவோ, கடலாகவோ, மழையாகவோ இருந்தபோது என்றாவது என் மீது பட்டு என்னைத் தழுவிக் கழுவிச் சென்றிருக்குமோ, இப்படி ஒரு அன்யோன்யம் எழுகிறதே! :பரமன் பச்சைமுத்து

இன்று சூரசம்ஹாரம்
தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)
தீபாவளி மழை
பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா, வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே, பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ, இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது, சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி… இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம். முதலில் நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா என்று கவலைப்படுமளவிற்கு விடாமல் பேய்… (READ MORE)
நரகாசுரன் நினைவுகள்
இருக்கும் வரை இன்னல்களே புரிந்திருந்தாலும், இறக்கும் தருணத்தில் ‘இன்புற்றிருக்கட்டும் உலகம்,’ என்று நினைத்தவன் இறைவனே அழித்தாலும்கூட கொண்டாடப்படுவான்! #நரகாசுரன் நினைவுகள் #தீபாவளி கொண்டாட்டங்கள் ( Got published in ‘infini’ Nov issue ) :பரமன் பச்சைமுத்து
குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால்
குளிர்காலக் காலையிலும் குளித்தவுடன் வியர்த்து ஊத்தினால், ஒன்று, வெளியே வானிலையில் குறைந்தழுத்த மண்டலம் உருவாகிள்ளது அல்லது நீங்கள் சென்னையில் இருக்கிறீர்கள் என்று அறிக! :பரமன் பச்சைமுத்து
தீபாவளி புடவை வாங்கும் படலம்
கண்ணெதிரே கையருகே எத்தனை நல்லது இருந்தாலும், தூரத்திலிருப்பதைப் பார்த்து வேண்டுமென ஆசைப்படுவது புடவைக் கடையில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பொருந்திப் போகும் மனித இயல்பு! #தீபாவளி புடவை வாங்கும் படலம் #மனைவியோடு கடையில்
செப்டம்பர் 17
சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிரான இரு விஷயங்களை ஒரே புள்ளியில் இணைத்துவிட்டு தள்ளி நின்று சிரிக்கிறது காலம்… ‘கடவுள் இல்லை’ என்றே இயக்கம் நடத்திய தலைவரும், ‘கடவுளுக்கு கோயில் கட்டுவோம்’ என்றே கட்சி வளர்த்த இயக்கத்தின் தலைவரும் ஒரே நாளில் பிறந்தார்கள்! # பெரியார், #மோடி, #செப்டம்பர் 17 : பரமன் பச்சைமுத்து
வாரும் மகாபலி…
வாரும் மஹாபலி! தான் கொடுத்த வாக்கைப் பலியீந்து தன்னைக் காப்பவன், சில காலம் மண்ணில் வாழ்வான். தன்னையே பலியாய் ஈந்து தன் வாக்கைக் காப்பவன் மண் பூமி இருக்கும் வரை அழியாப் புகழ் பெறுவான். அசுரனே என்றாலும் அன்பினால் ஆட்சி செய்தவனை அவன் மக்கள் கொண்டாடுவார்கள்! வாரும் மஹாபலி, வளம் பல தாரும் மஹாபலி! என்… (READ MORE)
தலுவை
நெற்றியில் திருமண், இடுப்பில் ஒரு சுற்று சுற்றி செருகிய வெள்ளைத் துண்டு, கையில் பளபளவென்று துலக்கப்பட்டு துளசி சுற்றப்பட்ட பித்தளைச் செம்பு, அந்த வயதிற்கேயுரிய பிடுங்கித் தின்னும் வெட்கம் சகிதமாய் ஒவ்வோர் வீட்டு வாசலிலும் ‘ நாரயண கோபாலா…’ என கூவிக்கூவி அரிசி சேகரித்து அம்மாவிடம் தந்த அரைக்கால் சட்டை பொழுதுகள் கிராமத்து கட்டாயங்கள் வந்து… (READ MORE)

Eid Mubarak!!!
எல்லாம் வல்லவனே,என்னைப் படைத்தவனே…எல்லாவற்றுக்கும் மேலானவனே, எல்லை இல்லாதானே…அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்தஅருட்பெருங்கடலே… வெறும் இந்திரியத் துளியிலிருந்து கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே… ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே! நன்றி! உணவை, பானத்தை, இச்சையை துறந்து இறையெண்ணம் வளர்த்து தூய்மை கொள்ளும் ஈகைப் பெருநாளில் வணங்கித் தொழுகிறேன் இறைவா! நல்வழிப்படுத்து,… (READ MORE)
தந்தை மனம்
செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில். இரை தவிர்த்து இறை தேடி ஓடும் நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க. கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது ” கவிதை எழுதிய கவிதை!” :பரமன் பச்சைமுத்து