
‘கா… கா…. கா…. கா….’
‘அத்தை ஏன் இப்படி கத்துது அது? சாப்பாடு வச்சாச்சா?’
‘தோ வைக்கறேன்!’ – அத்தை
‘கா… க்க்கா…’
‘யேய்… சாதம் வச்சாச்சில்ல, நீ சாப்டேன். எல்லாரையும் கத்திக் கூப்பிடறியா!’ ‘ஏங்க நான் கிளம்பறேன்!’ மனைவி
‘க்கா… க்ரகா…கா’
‘சோறு வைக்கலன்னு கத்தனே. இப்பதான் சோறு வச்சாச்சே, நீ சாப்டேன். ஏன் இப்படிக் கத்தற!’ – அத்தை
‘க்கா… கா…கா…’
இந்தக் காகங்களின் மொழி புரியாததால், அவை என்ன சொல்கின்றன என்பது தெரியவில்லை நமக்கு. ‘ஐய… அதே சோறா தெனமும்? அடுத்த தெருவுல லெக் பீஸ் போடறாங்கம்மா!’ ‘சூடாருக்குன்னு கத்தறேன் சும்மாருக்கியா!’ ‘ஹலோ, ஆந்திராவிலேருந்து வந்துள்ள என் ஃபிகரு தமன்னாவக் கூப்பிடறேன், போவியா!’ என்கிறதோ. காக்கைகள் என்ன பேசினாலும் நமக்கு அவை ‘கா… கா…’தான்.
( இதை எழுதி முடித்த 30 நிமிடம் கழித்து நடந்த இதை அப்படியே தந்துள்ளேன். )
Part 2:
20 நிமிடம் கழித்து :
‘அது மிக்சர் வச்சதுக்குப் அப்புறம்தான் கத்தறத நிறுத்துச்சு. சாப்டுட்டுப் போயிடிச்சி பாருங்க’ – அத்தை
சிலருக்கு மொழிகள் தாண்டி உணர்வுகள் வழியே சங்கதி புரிகிறது.
– பரமன் பச்சைமுத்து
ஆர் ஏ புரம்
28.01.2020