

அமாவாசை, விளக்கேற்றி இலை போட்டு அன்னம் படைக்க வைத்திருக்கிறாள் மனைவி. குளித்து வேட்டியணிந்து குனிகிறேன்.
‘சிவா… இடுப்புல ஒரு துண்ட எடுத்துக் கட்டு!’
தலைக்குள் கேட்கிறது அப்பாவின் குரல்.
நான் வாழும் வரை என் அப்பாவும் வாழ்கிறார் என்னுடனே என் நினைவுகளில்.
– பரமன் பச்சைமுத்து
17.09.2020
