
திருப்பூர் பகுதியின் குன்னத்தூர் காவல் நிலையத்தில், காலை காவலர்கள் கூடும் போது பணி பொறுப்பு பிரித்தளிக்கப்படும் தினசரி நிகழ்வில், நம் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் வாசிக்கப் படுகிறதாம்.
சுழற்சி முறையில் தினம் ஒரு காவலர் ‘வளர்ச்சி’ இதழின் ஒரு கட்டுரையை வாசிக்கிறார்கள். நாளின் தொடக்கத்தை மலர்ச்சி இறைவணக்கப் பாடலோடும், வளர்ச்சி கட்டுரையோடும் தொடங்குகிறார்கள்.
அந்த சில நிமிட நிகழ்வு அவர்களுக்கு நிறைய நல்லதை செய்கிறது என்று கூறுகிறார் அந்த காவல் நிலையத்தின் தலைமை ஆய்வாளர். தலைமை காவல் ஆய்வாளரின் முயற்சியால் சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இறையருள் பெருகட்டும்,
இவர்கள் வழியே நல்லவை நடக்கட்டும்!
பிரார்த்தனைகள்!
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
16.01.2021
Facebook.com/ParamanPage