

பாண்டிய ஆபத்துதவிகளும் ஒற்றர்களும் நெரிசலும் மிகுந்த நகராகிவிட்டது இது. நிர்வாகத்திற்காகவும் என் விருப்பத்திற்காகவும் புதிய தலைநகரை நிர்மாணிக்கிறேன், மொத்தமாக புலம் பெயர்ந்து போகிறேன்!’ என்று முடிவெடுத்து சோழப் பேரரசன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த சோழத் தலைநகரத்தை கடந்த போது ஒரு படமெடுத்துக் கொண்டேன்.
இந்த நகருக்கு வெளியேதான் தந்தை வழியில் சிவனுக்கு கற்றளி அமைத்து வடக்கிலிருந்து கங்கை நீரை கொண்டு குடமுழுக்கு செய்தான் அந்த வீரமாதேவியின் காதல் கணவன்.
இன்று எந்த வரலாற்று சுவடையும் தன்னில் கொண்டிருக்காமல், பெயரில் மட்டும் வரலாற்றை ஏந்தி நிற்கும் இந்த ஜெயங்கொண்டத்தில் வண்டியை நிறுத்தி காப்பி குடித்தோம் நானும் அமிர்தலிங்கமும்.
தஞ்சை அரண்மனையில் பிறந்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் போர்ப்பயணம் செய்து, இவ்வூருக்கு புலம் பெயர்ந்து, கேரளத்தில் ஒரு மகனை இழந்து, இன்னொரு மகன் ராஜாத்தியனிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டு, காஞ்சிபுரத்து பிரம்மதேசத்தி்ல் ஆயுளை கழித்து உயிர்நீத்த பேரரசன் ராஜேந்திர சோழனை, அவனது தலைநகரில் ஒரு காப்பியோடு நுகர்ந்து பருகுகிறோம்!
- பரமன் பச்சைமுத்து
ஜெயங்கொண்டம்,
13.02.2021 - Facebook.com/ParamanPage