


அழைத்தது திராவிட பாரம்பரியம் கொண்டவரும் திமுக நண்பர் என்பதாலும், மக்கள் நீதி மய்யத்தின் சிகே குமரவேலு, வைரமுத்து பேரவை நண்பர்கள் என எல்லாப் பக்கங்களிலிருந்தும் நண்பர்கள் வருகிறார்கள் என்று உறுதியானதாலும், இன்று வெல்கம் ஹோட்டலில் ( பழைய சோழா செரேட்டன்) நடந்த, வானதி சீனிவாசனுக்கு நண்பர்களால் நடத்தப்பட்ட விழாவிற்கு சென்றிருந்தேன்.
பல ஆண்டுகள் கழித்து பல நண்பர்களை சந்திக்கும் மகிழ்ச்சி வாய்ப்பும் வாய்த்தது. கரேத்தா தியாகராஜன், சோதிடர் ஷெல்வீ போல சில பாஜககார்ர்கள் இருந்தாலும் பெரும்பான்மையானவர்கள் என்னைப் போல நட்புக்காக வந்தவர்கள்.
‘இவர் பரமன் பச்சைமுத்து. பிரமாதமான ஸ்பீக்கர். சென்னை பல்கலைகழக சென்டினரி ஹால்ல மேடையில ஏறி பேசினார்னா அஞ்சாயிரம் பேரயும் அப்படியே நிறுத்தி வச்சி பேசுவார்!’ என்று நண்பர் அறிமுகப் படுத்த, ‘அப்படியா, அப்பன்னா நம்ப கட்சிக்கு கூட்டிட்டு வாங்க!’ என்றார் வானதி. அறிமுகப்படுத்திய திமுக நண்பர், நான் என இருவரும் சிரித்தோம்.
பாஜக கொடியோ, தாமரை சின்னமோ இல்லாதவாறு பார்த்து பார்த்து கட்சி கலப்பு இல்லாமல் செய்திருந்தார்கள். வானதி பாராட்டை ஏற்கும் போது தன் பொதுவாழ்க்கை நாட்களைப் பற்றிப் பேசினார். பாஜக இல்லாமல் எப்படி பேசமுடியும் அவரால். அவர் பேசினார்.
01.03.2021