தடுப்பூசி் பற்றி இன்னும் எதிர்ப்பு தகவல்கள் உலவிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தி முகாம்களை இயக்குகிறது அரசு. நேற்று வரை 20 கோடிக்கு பேர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்கிறது செய்தி.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ஒரு சிறப்பு அட்டை (‘ஸ்பெஷல் வேக்ஸின் பாஸ்’) ஒன்றைத் தந்து, அந்த அட்டைக்கு பல இடங்களில் முன்னுரிமை தரப்படும் என்று ஒரு முறையைக் கொண்டு வரலாம் ஒன்றிய, மாநில அரசுகள்.
‘தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டேன்! என் உரிமை!’ என்பவர்கள் தங்கள் கருத்தில் நிற்கட்டும், ‘ஆனால், தடுப்பூசி போட்டுகிட்டாதான், இந்த சலுகைகள் முன்னுரிமை கிடைக்கும்!’ என்ற முறைமை கொண்டு வந்தால், விகிதாச்சரமே மாறும்.
ஸ்டாலின் அவர்களின் அரசு இதை பரிசீலித்தால், பெரிய பலன் இருக்கும்.
– பரமன் பச்சைமுத்து
26.05.2021