




திருமணத்திற்கு வருவோர் மணமக்களுக்கு என்ன பரிசு பொருள் தருவர்? பேனா, கடிகாரம், நகை, பொன்னாடை, கண்ணாடி – பீங்கான் வேலைப்பாடுகள் கொண்ட அழகுப் பொருள்கள், சாமி சிலைகள், நூல்கள், இவைதானே?
கோவையில் நடைபெற்ற நம் மலர்ச்சி மாணவர்கள் ஜவகர் சுப்ரமணியம் – பத்மாவதி தம்பதியினரின் மூத்த மகள் ஸ்வர்ணபிரபா திருமணத்திற்கு சென்றிருந்த எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் வந்தது.
‘விலைமதிப்பில்லா உங்கள் அன்பையும் அன்பளிப்பையும் புத்தகங்களாய் தாருங்கள். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு உரைகள், இந்திய ஆட்சிப்பணி போட்டித் தேர்வு கைடுகள், சுய முன்னேற்ற நூல்கள், கவிதைகள், புதினங்கள், நோட்டுப் புத்தகங்களாகத் தாருங்கள்’ என திருமண அழைப்பிதழிலேயே அச்சிட்டு கோரிக்கை வைத்திருந்தனர்.
பரிசாக வந்த நூல்கள், நோட்டுப் புத்தகங்களை பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மாணவர்களிடம் தருவதற்கு டாக்டர் கலாம் ஃபவுண்டேஷன் மூலம் ஏற்பாடு செய்திருந்தனர்.
‘அட.. இப்படி செய்யலாமே!’ என்று மகிழ்ந்து இந்த முன்னெடுப்பை கை தட்டி வரவேற்றேன்.
ஆட்சிப்பணி நூல்கள் கையேடுகள், 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு கைடுகள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு பயன்தரும் என்ற எண்ணமே என்னை நெகிழ வைக்கிறது. அசந்து போனேன்.
திருமணத்திற்கு வந்து வாழ்த்திப் போவோருக்கு தரப்படும் தாம்பூலமும் சிறப்பானதாக இருந்தது. அவர்கள் தயாரித்து விற்பனை செய்யும் ‘அம்மா’ பிராண்டின் ‘இட்லி கொள்ளுப் பொடி’ சிறு பாட்டிலில், கூடவே நீரினை மாசுபடுத்தாமல் சூழலை காக்க, துவைப்பதற்கும் பாத்திரம் கழுவுவதற்குமான பூந்திக்காய் எனப்படும் பூவந்திக்காய் ஒரு பொட்டலம்.
(நொய்யல் நதி மீட்பு, மரங்களை அகற்றி புதிய இடத்தில் நட்டு உயிர்ப்பிக்கும் இயக்கம், மண் காக்கும் சூழல் காக்கும் இயக்கம் என கோவையின் பல முக்கிய அமைப்புகளில் இணைந்து செயல்படும் தன்னார்வலர் நம் ஜவகர் சுப்ரமணியன்)
தாம்பூலத்தையும் அதனோடு தரப்பட்ட அச்சிட்ட குறிப்புகளையும் படமெடுத்து இணைத்துள்ளேன். பார்க்க.
ஆட்சிப்பணி நூல்கள் கையேடுகள், 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு கைடுகள், நோட்டுப்புத்தகங்கள் ஆகியவை மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு பயன்தரும் என்ற எண்ணமே என்னை நெகிழ வைக்கிறது. அசந்து போனேன். நாமும் பின்பற்றலாம்.
நல்ல முன்னெடுப்பு. மகிழ்ந்து பாராட்டுகிறேன்.
வாழ்க! வளர்க!
-பரமன் பச்சைமுத்து
08.06.2024
பெருங்கடல்கள் சூழலியல் நாள்
#ParamanTouring #Coimbatore #Covai #Paraman #ParamanPachaimuthu #Environment #சூழலியல் #பரமன் #பரமன் பச்சைமுத்து #MarriageGiftBooks #ParamanLifeCoach
#MalarchiMaanavargal #JawaharSubramaniyan