பெரும் போர் வீரர்களாகவும் கடும் விவசாய உழைப்பாளிகளாகவும் இருந்த மண்ணின் மைந்தர்களான கொடவர்கள் குடியின் பகுதி ஒரு தனி மாநிலமாக இருந்து, பிறகு மைசூர் சமஸ்தானத்தில் இணைக்கப்பட்டு பிறகு கர்நாடகத்தின் முக்கிய பகுதியாக மிளிர்கிறது கூர்க் என்றும் கொடகு என்றும் அழைக்கப்படும் மலைப்பகுதி.
மைசூரிலிருந்து புலிகள் சரணாலயம், யானைகள் காப்பகம் கொண்ட, மேகங்களை அசால்ட்டாக கிழித்து அதற்கும் மேலான உயர்ந்த மரங்களைக் கொண்ட நாகர்ஹோலே காட்டைக் கடந்தால் தொடங்குகிறது கொடவா மாவட்டம் என்னும் கூர்க்.
முந்தின நாள் திருவள்ளூர் கேட்டர்பில்லர் தொழிற்சாலை வளாகத்தில் 39 டிகிரி வெக்கை நெருப்பு சூட்டில் கன்னக் கதுப்பு எரிய நடந்தவனுக்கு, அதே மதியம் 1 மணிக்கு இங்கு 26 டிகிரி என்றால் கூடுதல் மகிழ்ச்சி உணர்வுதானே வரும்!
‘குடகு மலைக் காற்றில் வரும் பாட்டு கேக்குதா?’ பாடல் மனதில் வரும் போதே, ‘இல்லை குடகு மலைக் காற்றுக்கு ஒரு டீ கேக்குது!’ என்று கட்டளை போட்டது மனது.
இந்தியாவின் அதிக அளவு காஃபி விளையும் பகுதியில் தேநீருக்கு இறங்கிவிட்டோம்!
-பரமன் பச்சைமுத்து
கூர்க்
26.05.2024
#ParamanTouring #Paraman ##ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #Karnataka #Tea #Coorg #Kodagu #Coffee