‘மணி பேச்சு’ ஆனந்த் சீனிவாசன் போலவே வந்தான் *முத்து*.
ரோபோ போல கழுத்தோடு உடம்பையும் திருப்பும் *அமிர்தலிங்கம்.* (மெயில் ஐடி தெரியுமா? அமிர்தலிங்கம் எம்பிஏ @ ஜிமெயிலாம்!)
‘ஒரு வேளை இவன் இந்த மீட்டிங்குக்கும் வாக்கிங்லயே வந்துருப்பானோ!’ என நம்மை பதற வைக்கும் *ராஜவேல்*.
இன்றும் கேள்விகள் உண்டு ஆனால் நிறைய தீர்மானத்தோடு பேசும் *சந்திரமௌலி.*
கொஞ்சம் கேப்பிலும் நிறைய சிரிப்பவனாகவே இன்னமும் *முரளிப்பிரகாஷ்.*
இவர்களோடு ஓவராகப் பேசும் நான், *பரமன் பச்சைமுத்து*
அங்க்கிள் ஆகிப் போன அனுபவம் முதிர்ந்த நண்பர்களின் அட்டகாசமான அளவளாக நிகழ்ந்தது Amilies Cafe Meet.
பரங்கிக்காய் சூப், காளான் சூப், ச்சீஸ் பால், லசாங்கே உணவுகளுக்கிடையே நடந்த உரையாடல் பரிமாற்றங்கள் உன்னதமாக இருந்த்து.
உடல்நலம், பங்குசந்தை, நில முதலீடு, உணவு முறை, மருத்துவம், வகுப்புத் தோழர்கள் நினைவு கூறல், நம் பிள்ளைகள் பற்றிய பகிர்வு, சாலை போக்குவரத்து, பழைய நினைவுகள் பகிரல், கார் பயன்பாடு, சிங்கப்பூர் சிஸ்டம், ஹாங்காங், ஜப்பானிய உணவு, மக்கள், இன்சுலின் ரெசிஸ்டண்ட், ஆம்வே புரோட்டின் என சகட்டுமேனிக்கு அளவளாவினோம்.
வயதும் அனுபவமும் கூடியுள்ளது பகி்ர்வுகளில் தெரிந்தது.
முத்து வயிற்றைக் கட்டுவதற்காக வாயைக்கட்டிவிட்டான். கார்லிக் பிரட்டை திங்க வைக்கவே பெரும் முயற்சி தேவைப்பட்டது. ராஜவேலுக்கு எப்போதும் போல உணவை பார்த்த உடனேயே வயிறு நிரம்பி விட்டது. அழகு மௌலி அளவாகச் சாப்பிட்டான்.
நானும், முரளியும் வெளுத்துக் கட்டினோம் ஓரளவுக்கு.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு மீண்டு நலம் பெற்று வருகிறான் அமிர்தலிங்கம்.
நற்சந்திப்பு!!
முரளிப்பிரகாஷை டிஎம்எஸ் மெட்ரோவில் இறக்கி விட்டு நானும் ராஜவேலும், அமிர்தலிங்கத்தை கோட்டூர்புரத்தில் விடுவதாக முத்து, தனிவழியில் மௌலி என அனைவரும் புறப்பட்டோம்.
அன்றாட அலுவல்களுக்கிடையே நல்ல சந்திப்பாக நிகழ்ந்தது. நல் உணர்வோடு திரும்புகிறோம்.
-பரமன் பச்சைமுத்து
01.07.2024